மேலும் அறிய

Rajya Sabha Election Date: மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?

Rajya Sabha Election Date: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தலை அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ , கனிமொழி சோமு ஆகியோரும் அதிமுக சார்பில்  தம்பிதுரை மற்றும் அதிமுக கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

ஏப்ரல் 1ஆம் தேதி முடியும் பதவிக்காலம்

இந்த 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. எனவே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்று தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு மாநிலங்களிலும் உள்ள  37 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

  • வேட்பு மனுவானது பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 5ஆம் தேதி
  • வேட்பு மனு பரிசீலனை மார்ச் 6ஆம் தேதி
  • வேட்பு மனுவை திரும்ப பெறும் நாள்- மார்ச் 9ஆம் தேதி
  • வாக்குப்பதிவு- மார்ச் 16ஆம் தேதி
  • வாக்கு எண்ணிக்கை- மார்ச் 16ஆம் தேதி

யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக 4 இடங்களும், அதிமுக சார்பாக 2 இடங்களிலும் போட்டியிட முடியும். அந்த வகையில் திமுக சார்பாக திருச்சி சிவா மற்றும் என்.ஆர்.இளங்கோவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைக்கும் ஒரு இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதேபோல அதிமுகவில் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தலாம். ஏற்கனவே தேமுதிகவிற்கு ஒரு இடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேமுதிக கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வராதபட்சத்தில் இரண்டு இடங்களில் அதிமுகவே போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் தம்பிதுரைக்கு மீண்டும் வாயப்பு வழங்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
P.Wilson MP : ‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget