மேலும் அறிய
Advertisement
EPS: மதுரையில் காலி சேர்களுக்கு நடுவே பேசிய எடப்பாடி பழனிசாமி..! நடந்தது என்ன?
பல்வேறு கட்சியில் பயணித்த டாக்டர் சரவணனை மேடையில் பக்கத்தில் வைத்துக் கொண்டே அமைச்சர் செந்தில் பாலாஜி 5 கட்சியில் பயணித்தவர் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை வளையங்குளம் பகுதியில் டாக்டர் சரவணன் தலைமையில் 10 ஆயிரம் பேர் வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கீழ் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடும் வெயிலில் மதியமே அதிகளவு பெண்கள் திரட்டி வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர்.
அனைவருக்கும் நான் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டு சாமியான பந்தல் நிழலில் அமர வைக்கப்படிருந்தனர். அப்போது மேடையில் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசும் போது ”10 ஆயிரம் நபர்கள் இணையும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் நபர்கள் வந்துள்ளார்களே” என்று உற்சாகம் ஊட்ட பேசினார். ஆனால் அப்போது கூட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தான் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, மற்றும் ராஜ் சத்தியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்பாகவே பல பெண்கள் வெயில் தாங்க முடியாமல் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இதனால் அந்த நிகழ்ச்சியில் காலி சேர்கள் பளிச்சென தெரிந்தது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தன் உற்சாக பேச்சை கைவிடாமல் தொடர்ந்து உரையை பேசி முடித்தார். முன்னாதக அவர் பேசும் போது பல்வேறு கட்சியில் பயணித்த டாக்டர் சரவணனை மேடையில் பக்கத்தில் வைத்துக் கொண்டே அமைச்சர் செந்தில் பாலாஜி 5 கட்சியில் பயணித்தவர் என்று பேசினார். டாக்டர் சரவணனை இனியாட்சும் கட்சி மாறமல் இருங்கள் என உள் குத்தாக சொல்கிறாரோ என்றபடி இருந்தது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS Speech: தி.மு.க. அமைச்சர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion