மேலும் அறிய

‘இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது’ - புகழேந்தி

கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது. இதனால் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, இதற்கு முன்பாக தனி நீதிபதியின் தீர்ப்பு. 75 பக்கங்கள் கொண்ட நீதிபதியின் தீர்ப்பு எல்லாமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட நீதிபதியின் தீர்ப்பி பல தவறுகளை கண்டு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்கிறோம். பொதுக்குழுவை கூட்ட எடுத்த முடிவு தவறு என்றுதான் எங்கள் கருத்து என்றும் கூறினார். கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது.

இதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி தான் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல்முறையீடுக்கு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம், கட்சிபிரச்சனைகளில் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டது தான் தேர்தல் ஆணையம், இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் சென்றால்தான் கிடைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு சாதகமாக நிச்சயம் வரும் எனவும் பேசினார். எடப்பாடி பழனிசாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் செம்மலையாவது கூற வேண்டும், பலகாலமாக திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவி பெறுவதற்கு முயற்சி செய்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார்.அதற்கு செம்மலை உறுதுணையாக உள்ளாரா என்பது தான் கேள்வி எழுந்துள்ளது என்றார்.

‘இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது’ - புகழேந்தி

ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் வேண்டும் என்று கூறுவதாக விரும்புவதாக கேள்விக்கு,எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்திக்கவில்லை. எந்த ஒரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி நான் பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு கேட்கவில்லை, எனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் யாரும் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. மேலும் ஓபன்னீர்செல்வம் இதுவரை எப்பொழுதும் ஒற்றை தலைமை நான் தான் இருக்க வேண்டும் என்று கூறியதில்லை. சாதாரண உறுப்பினரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தால் ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வர். எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டரை தேர்ந்தெடுப்பாரா என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார்.

சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எல்லோரும் இணைய வேண்டும் என்று சொன்னால், ஒன்று சேர்ந்து போக தயாராக உள்ளோம் எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கொண்டாட முடியாது. நீதிமன்ற உத்தரவு படி, நிலுவையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கை தனி நீதிபதி தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக இருப்பதால், தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் என தற்போது உள்ள பெஞ்சின் தீர்ப்பின் அம்சமாக உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்கின்றனர் நடுவில் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget