Edappadi Palanisamy: சோனமுத்தா போச்சா.?!! முக்குலத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால், சட்டமன்ற தேர்தலின்போது, தென் மாவட்டங்களில் முக்கியமாக கருதப்படும் முக்குலத்தோர் வாக்குளை அதிமுக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து திமுகவும் பாஜகவும் காய்நகர்த்தி வரும் நிலையில், அதிமுக மட்டும் இந்த ரேஸில் பின் தங்கியிருப்பதாகவும், எடப்பாடியின் இந்த சொதப்பல் நடவடிக்கை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை கடுமையாக பாதிக்கும் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சிதமாக காய்களை நகர்த்திய திமுக, பாஜக
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிரடி காட்டியுள்ளது. மேலும் நாதக, தவெக தனித்து போட்டி என அறிவித்துள்ளது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு கேம் சேஞ்சராக மாறவும் வாய்ப்புள்ளது.
எனினும் திமுக அதிமுக ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்ட வாக்கு வங்கியை குறிவைத்துள்ளது திமுக. தென் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்தே சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது திமுக. காரணம் அந்த சமூகத்தினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளினால் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்படும் என கருதுகின்றனர். இந்நிலையில் தான், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவுக்கு வழங்கியுள்ளார் ஸ்டாலின். திருச்சி சிவா இந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் பாஜகவும் முக்குலத்தோரின் வாக்குகளை மனதில் வைத்தே நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்குளத்தோர் வாக்குகளை கோட்டை விடும் இபிஎஸ்
இப்படி நேரம் பார்த்து பிற கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், ஈபிஎஸ் மட்டும் கோட்டை விட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். காரனம் ஆரம்பத்தில் இருந்தே ஈபிஎஸ் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோரை ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அச்சமூகத்தினருக்கு ஈபிஎஸ் மீது ஒருவித எதிர்ப்பலை உருவாகியுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த தனது சமூகத்தினரையே முன்னிலைப்படுத்த ஈபிஎஸ் விரும்புவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.
இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பின் போதும் மேடையேறிய ஆர்.பி. உதயகுமாரை இருக்கை இல்லை எனக்கூறி கீழே இறங்க சொல்லியிருக்கிறார் ஈபிஎஸ். உதயகுமாரும் முக்குளத்தோர் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் ஈபிஎஸ் உடன் மேடையில் அமர்ந்திருந்த கேபி முனுசாமி மற்று எஸ்பி வேலுமணி இருவருமே கொங்கு மண்ணின் மைந்தர்கள் என்பதாலும், ஈபிஎஸ் மீதான அதிருப்தி அச்சமூகத்தினரிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இப்படியான நிலையில், திமுக, பாஜக ஆகிய இருகட்சிகளும் கச்சிதமாக வாக்கு வங்கியை நோக்கி காய்களை நர்த்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தினால், அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக குமுறுகின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
தற்போதுதான் பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டோமே என்று நினைத்துவிடாமல், இனியாவது சுதாரித்துக்கொண்டு, அச்சமூகத்தினரிடம் நற்பெயரை எடுக்கும் செயலில் இபிஎஸ் இறங்குவாரா என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு எட்டுமா.?





















