‛நதியில் வெள்ளம், கரையில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு’ -ஓபிஎஸ் பாடல் சொல்வதென்ன?
சிவாஜியின் தேனும் பாலும் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி தன்னுடைய நிலைமை என்னவென்று அவை முன்னவருக்கு தெரியும் என ஓபிஎஸ் கூறியதால் அவையில் சிரிப்பலை தோன்றியது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் விவாதத்தின்போது, கண்ணதாசன் பாடல் வரிகளை சுட்டிக்காட்சி ஓபிஎஸ் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை தோன்றியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்துக்கு எதிப்பு தெரிவித்து பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரையும், வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரையும் காத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதன்பின்னர், பேரவைக்குள் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறதா? இல்லையா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்புக்க்கு பிறகுதான் பதில் கூற முடியும் என்றார். மேலும், அதிமுக ஆட்சியில், எத்தனை முறை வேளாண் சட்டங்கள் குறித்து கடிதம் அனுப்பி உள்ளீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு, ‘நதியின் வெள்ளம் கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் தற்போதைய நிலைமை’ என, சிவாஜியின் தேனும் பாலும் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி தன்னுடைய நிலைமை என்னவென்று அவை முன்னவருக்கு தெரியும் என ஓபிஎஸ் கூறியதால் அவையில் சிரிப்பலை தோன்றியது.
#BREAKING | நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுவே என் நிலை - ஓபிஎஸ் https://t.co/wupaoCQKa2 | #TNAssembly | #OPanneerselvam | #FarmersProtests | #AIADMK | #MKStalin | @OfficeOfOPS pic.twitter.com/cNHHDB0Jlr
— ABP Nadu (@abpnadu) August 28, 2021
முன்னதாக, இந்த தீர்மானத்துக்கு எதிப்பு தெரிவித்து பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்தது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரையும், வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரையும் காத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மாநில அரசு உள்நோக்கத்தோடு இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எதிரானதாக இந்தத் தீர்மானம் இருப்பதாகவும் வெளிநடப்பு செய்த பாரதிய ஜனதா உறுப்பினர் கூறியுள்ளனர்.