மேலும் அறிய

‘ஸ்டாலின் சட்டைப்பையில் பேனா வைத்த துரைமுருகன்’ பொதுக்குழுவில் நடந்த சுவாரஸ்சியம்..!

’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டைப்பையில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேனாவை கொண்டுச் சென்று வைத்தது பொதுக்குழுவில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது’

திமுகவின் 15வது பொதுக்குழு நேற்று நடந்து முடிந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைவராக போட்டியின்றி பொறுப்பேற்றியிருக்கிறார். பொதுக்குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மு.க.ஸ்டாலினை பாரட்டியும் புகழ்ந்தும் பேசியிருந்தனர்.

வழக்கம்போல, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவருமான துரைமுருகன் பேசி முடிந்த பின்னர், அருகே இருந்த நபரை ‘டேய் எங்கடா அது, எடுடா’ என்றார். அரங்கம் ஒரு நிமிடம் அதிர்ந்து அமைதியானது.  என்ன பேசுகிறார் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஒரு பெட்டியில் இருந்து புத்தம் புது இரண்டு பேனாக்களை எடுத்தார் துரைமுருகன்.

‘ஸ்டாலின் சட்டைப்பையில் பேனா வைத்த துரைமுருகன்’ பொதுக்குழுவில் நடந்த சுவாரஸ்சியம்..!

 

மு.க.ஸ்டாலின் போடும் திட்டங்கள் எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் ஒரு ஜோடி Mont Blanc பேனாக்களை அவருக்கு நான் அன்பளிப்பாக அளிக்கிறேன் என்றார். அதோடு, இந்த பேனாவால் தான் இனி மு.க.ஸ்டாலின் கையெழுத்திடவேண்டும், வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகளை நான் கொடுக்கும் இந்த பேனாவை கொண்டே எழுதி வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Mont Blanc பேனாவில் Rare Collection பேனாக்களை முதல்வருக்கு அளிக்கிறேன் என்று சொல்லி, பேசிக்கொண்டிருந்த போடியத்திலிருந்து நேராக திமுக தலைவரை நோக்கி சென்றார் துரைமுருகன், அவர் தன்னை நோக்கி வந்ததும் எழுந்த மு.க.ஸ்டாலினின் பையில் இருந்த பேனாவை எடுத்து கீழே போட்டுவிட்டு, தான் அன்பளிப்பாக கொடுக்கும் இரண்டு பேனாக்களையும் அவரது சட்டப்பையில் சொருகினார் துரைமுருகன்.

துரைமுருகனின் இந்த செயல் திமுக பொதுக்குழுவில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.  துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கிய பேனா இணையதளம் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலை 40 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சம் ரூபாய் வரையில் பல்வேறு சேர்மானங்களோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மன் கண்டுபிடிப்பான இந்த பேனாக்கள் வைத்திருப்பதை பலரும் பெரிய அங்கீகாரமாக உலக நாடுகளில் நினைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget