மேலும் அறிய

‛வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க போவதில்லை...’ -டாக்டர் ராமதாஸ் பேச்சு!

‛இதுவரை எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது, நான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன்,’ -ராமதாஸ்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் சூரமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாநகரம், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றிய போது, பாமக ஆட்சி நடைபெற வேண்டும் அதற்காக தனித்து நின்று அன்புமணியை முன்னிலைபடுத்தி தேர்தலிலும் போட்டியிட்டோம். கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கூட அப்போது பெறவில்லை, வட தமிழ்நாட்டில் வாழும் அனேக மக்களும், வன்னியர்கள், ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.

‛வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க போவதில்லை...’ -டாக்டர் ராமதாஸ் பேச்சு!

அனைத்து சமுதாயத்தினரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று 45 வருடங்களாக போராடி வருகின்றேன். அதற்காக போராடி உயிர் பலிகொடுத்தும் உள்ளோம். அப்படி போராடிய, நான் சரியாக வழி நடத்தவில்லையா, என்ன தவறு செய்தேன், வழி நடத்திய என்னிடம் என்ன தவறு உள்ளது என தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். தனி இடஒதுக்கீடு என 10.5 விழுக்காடு பெற்றும் நீதிபதி அதற்க்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார். தனி இடஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேர தேவை இருந்து இருக்காது. பாமகவினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றனர். அதனால் 20 தொகுதியில் வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது என்றார். 234 தொகுதியில் பாமகவிற்கு வெறும் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட பிறரிடம் அதிக சீட்டு வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது வேதனையாக உள்ளது. இந்நிலையால் மானம் உள்ளவராக, கோபம் வர வேண்டாமா, ரோசம் வர வேண்டாமா என்றார். இன்னும் நாம் ஏமாளிகளாக இருந்தது போதும்,வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

‛வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க போவதில்லை...’ -டாக்டர் ராமதாஸ் பேச்சு!

பணத்திற்காக ஆசைபட்டு , மானத்தை வீரத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டோம், இனிவரும் காலத்தில் பணம் முக்கியம் இல்லை, இனம் தான் முக்கியம் மானம் தான் முக்கியம் என்று வீரத்துடன் செயல்படுவோம் என்றார். இதுவரை எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது, நான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன். வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க போவதில்லை , இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமகவிற்கு வர வேண்டாம் வாக்கு மட்டும் பாமகவிற்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டுமா அறிக்கை வெளியிடுகிறேன்.ஒட்டு மொத்த தமிழக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இல்லாத அக்கரை தனக்கு தான் உள்ளது. அனைவரையும் ஆதரித்துவிட்டீர்கள் ஒரு முறை அன்புமணியை ஆதரியுங்கள் என கேட்டுக் கொண்டார். பிற கட்சி வன்னியர்களை சந்தித்து ஆதரவு திரட்டுங்கள், பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை கொண்டு வரவேண்டும், அதற்காக வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget