மேலும் அறிய
Advertisement
கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கெல்லாம் ஓடுகிறவன், எச்சிலைக்கு ஓடும் நாயை போன்றவன் - அமைச்சர் துரைமுருகன் பேசியது என்ன?
நன்றி என்று பார்த்தால் என் முதல் நன்றி எம்ஜிஆருக்குத்தான், ஆனால் கட்சி என்று பார்த்தால் திமுகதான் என்னுடைய கட்சி, எம்ஜிஆர்தான் என்னை வாழ வைத்த தெய்வம், வணக்கத்திற்கு உரியவர்,
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியரின் சிறப்புகளை திமுகவினருக்கு எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் , தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில் , எனக்கு கிடைத்த வாய்ப்புகள் வேறு யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, எனவும் கடந்த காலங்களில் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி தேர்தலை சந்திக்கும்போது அனைவரும் சென்று நிலையில், கூட நான் திமுகவின் கொள்கை பிடிப்பும் கருணாநிதியின் செயல் திறனும் கண்டு அதில் இருந்தேன்.
நாவலர் போன்றவர்களுக்கு எம்ஜிஆரை தெரியும் என்பதை தவிர வேறு ஒன்றும் அறியாதவர்கள் . ஆனால் நான் எம்ஜிஆரின் மடியில் தவழ்ந்தவன் என்றும் , நான் நன்றியோடு கூறுகிறேன் எனக்கு ஏழு ஆண்டுகள் என் கல்வி செலவை முழுவதும் ஏற்றவர் எம்ஜிஆர் எனவும் , எனது திருமணம் காட்பாடியில் நடந்தபோது விமானத்தை தவர்த்துவிட்டு தனி விமானம் மூலம் எனது திருமணத்திற்கு வந்து, எனக்கு பணம் மற்றும் நகை பரிசளித்து சென்றவர் எம்ஜிஆர் என குறிப்பிட்டார்.
மேலும் என்னை அவர் வழக்கறிஞராக பார்க்க ஆசைப்பட்டதும் உண்டு எனவும், அவ்வளவு நெருக்கம் எனக்கும் எம்ஜிஆர் இருக்கும் இருந்த நிலையில், ஒரு சமயம் சட்டப்பேரவை தலைவர் அறையில், இருந்து என்னை தனியாக அழைத்து சென்று நான் சொன்னால் நீ செய்வாயா எனக் கேட்டார். அதற்கு நிச்சயமாக செய்வேன் என்ற நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இருக்கைக்கு அருகில் போய் அமர்ந்துகொள். உனக்கு தேவையான அமைச்சர் பதவி தருகிறேன் என கூறியபோது, அது மட்டும் என்னால் இயலாது எனக்கூறி நன்றி என்று பார்த்தால், அது உங்களுக்கு எனவும், கட்சி என்று பார்த்தால் திமுக என கூறியதை கண்டு வியப்புற்று சட்டப் பேரவையில் ஒரு முறை எனது தம்பி துரைமுருகன் கொள்கையில் உறுதியானவன் என தெரிவித்து வாழ்த்து தெரிவித்தவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.
மேலும் தற்போது உள்ள நிலைமையில் தொண்டர்களின் மனம் வேதனை அடையாத வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் எனவும், காலம் விரைவில் வந்தால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் எனவும் திமுகவின் கொள்கை பிடிப்பு கொண்ட தொண்டர்கள் இருக்கும்வரை யாரும் எதுவும் அசைக்கவும் முடியாது. கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கெல்லாம் ஓடுகிறவன், எச்சிலைக்கு ஓடும் நாயை போன்றவன் என பேசினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2024
திரை விமர்சனம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion