DMK District Secretaries : திமுகவில் அதிரடியாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்.. 7 பேர் மாற்றம்.. முழு விவரம் உள்ளே..!
செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அதில், மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22 ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தநிலையில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கிற்கு ராமச்சந்திரனுக்கு பதிலாக ரவியும், நாமக்கல் மேற்கிற்கு மூர்த்திக்கு பதில் செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், கிருஷ்ணகிரி கிழக்கிற்கு செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், திருவள்ளூர் மேற்கிற்கு பூபதிக்கு பதில் சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முழு விவரம்:
திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதன்படி, 72 மாவட்ட செயலாளர்களில் 64 திமுக மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட செயலாளர்கள் :
சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த. வேலு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சிற்றரசு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளராக மாதவரம் சுதர்சனம், சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இளங்கோ என்ற இளைய அருணா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.