மேலும் அறிய
Advertisement
அமைச்சர் உதயநிதியை விமர்சித்த சிவி சண்முகம்..! ' ஒருமையில் திட்டி தீர்த்த ' அமைச்சர் பொன்முடி
பேருந்தில் பெண்கள் பயணம் செய்வது குறித்து சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்திவிட்டனர்
திராவிட முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்றத்திற்கு தொகுதிக்கு உட்பட்ட, செங்கல்பட்டு நகர் பகுதியில் பேராசிரியர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். " மேடையில் கட்சியினர் மத்தியில் பொன்முடி பேசுகையில்,
இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் , 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அந்த உணர்வுதான் அனைவருக்கும் இருக்க வேண்டும். நம்முடைய அன்பிற்குரிய உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து, ரெண்டு நாளா ரொம்ப பேருக்கும் ,அதுதான் பிரச்சனையே.. உதயநிதி, உதயநிதி உதயநிதி என பேசுகிறார்கள்.
உதயநிதி அமைச்சரானதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சுக்கு, மேடையில் பதிலளித்து பொன்முடி பேசினார். அப்பொழுது கூறுகையில்," என்னுடைய மாவட்டத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவன் இருக்கிறான்" எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா என பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் சிவி சண்முகத்திற்கு வரலாறு தெரியவில்லை, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உயிரிழந்தவுடன் அவருடைய துணைவியார் ஜானகி எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஜானகி முதல்வராக இருந்த பொழுது, நான்தான் உண்மையான வாரிசு என ஜெயலலிதா கூறினார். அது எப்படி என்பது உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன் என சிரித்துக்கொண்டே பேசினார். சி.வி சண்முகம் அவர்களே, உங்கள் அப்பா முன்னாள் எம்பி , அதன் அடிப்படையிலேயே , கட்சியில் இடமும் சீட்டும் கிடைத்தது, எனவே அவருக்கு வாரிசு அரசியல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
சசிகலா ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்தார், அவரையே தலைவராக்கிக் கொள்ள நிலையில் இந்த அதிமுகவினர் இருந்தனர். ஆனால் வாரிசுகளாக இருந்தாலும், கட்சியைப் பணிகளை ஆரம்பம் முதலே ஈடுபட்டால்தான் திராவிட கொள்கை உணர்வு அவர்கள் இருக்கும் அப்படி சிறு வயது முதலே பணியாற்றியவர்தான் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் மீது நிறைய அக்கறை உள்ளது. அவருக்கு எல்லா விளையாட்டுகளும் தெரியும். எனவேதான் அந்த துறைக்கு அவரை அமைச்சராக நியமித்துள்ளது கட்சி.
செங்கல்பட்டில் இருந்து பெண்கள் பலரும் சென்னைக்கு இலவசமாகத்தான் சென்று இருப்பீர்கள், பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தையை சாதாரணமாக கூறினேன். ஆனால் அதை பெரிது படுத்திவிட்டீர்கள். என வேதனையுடன் தெரிவித்தார். இந்த விழாவில் ஏராளமான திமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion