Sonia Gandhi: ஓய்வு அறிவிக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி? 2024-ஆம் ஆண்டில் திட்டம் என்ன?
Sonia Gandhi Quitting Politics: பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைந்து விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெற கூடிய இம்மாநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி இன்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி சீரழித்து வருகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது. இது காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சவாலான காலமாகும்.
”எனது இன்னிங்ஸ் முடிவடைந்து விட்டது”
எனது இன்னிங்ஸ் பாரத் ஜோடோ யாத்திரையுடன் முடிவடைந்துவிட்டது. 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிகளும், மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையும் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன.
இந்நிலையில்,சோனியா காந்தி அறிவிப்பானது, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு இனி வகிக்க மாட்டேன் என்பதை உணர்த்துகிறாரா அல்லது முழுமையாக அரசியலில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#WATCH | Our victories in 2004 &2009 along with the able leadership of Dr Manmohan Singh gave me personal satisfaction but what gratifies me most is that my innings could conclude with Bharat Jodo Yatra, a turning point for Congress: Cong MP & UPA chairperson Sonia Gandhi, Raipur pic.twitter.com/UhI1bINNpn
— ANI (@ANI) February 25, 2023
இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதையே குறிப்பிட்டுள்ளார். அவர் எங்களுக்காக தொடர்ந்து இருப்பார் எனவும் தெரிவிக்கின்றனர்.