மேலும் அறிய

CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  அவர் தமிழ்நாட்டு மக்கள் பெரியாரின் கருத்துக்களையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் என தெரிவித்துள்ளார். 

” மதவெறி அரசியலால்  மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

இராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. 

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால இராமர்  சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி . அருள்மிகு கோதண்டராமர் க்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் கோயில்களிலும், சித்திரைத் விழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், வாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் விழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் அறுபத்து மூவர் வீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான  கோதண்டராமர் கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget