மேலும் அறிய

CK Kumaravel Resign: இன்றும் தொடர்கிறது... மநீம.,வில் இருந்து சி.கே.குமரவேலும் விலகல்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல். தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும், மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரன், பத்மபிரியா, முருகானந்தம் ஆகியோரை தொடர்ந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேலும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளார். 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் டெபாசிட் இழந்தது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல சர்சைகள் ஏற்பட்டு முக்கியமான நிர்வாகிகள் மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம்,  மதுரவாயல் வேட்பாளர் பத்பபிரியா ஆகியோர் விலகினர்.

இந்நிலையில், அக்கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகியுள்ளார். தனது விலகல் குறித்து கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘2019-ல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி போனாலும், தமிழகத்தில் உங்களாலும் மக்கள் நீதி
மய்யத்தாலும் மட்டுமே  ஒரு மிகப்பெரிய மோற்றத்தத கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான்
மீண்டும் இணைந்தேன். மக்கள் இடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது.

கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி
சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை நான்
கண்கூடாக பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து, மய்யத்திற்கு 'டார்ச்லைட்' சின்னம் மீண்டும் கிடைத்த
போதும்,  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த போதும், மக்கள் நீதி
மய்யத்தின் மீதான அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.

ஆனால், இன்று நமக்கான  வாய்ப்புகளை நாம் இழந்துவிட்படோம். எதிர்க்கட்சியில் அமரவேண்டிய அத்தனை
தகுதிகளும் நமக்கு இருந்த போதும், ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?

உங்களுதடய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழிநடத்தலும் தான் காரணம். ஒரு
தொகுதியில், வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான், மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது.

நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள்
முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

வரலாறு படைப்பவர்களாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும். ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு.

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து  இருக்கிற அரசியலை விடவும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்

ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியோக விலகுகிறேன்.

On a personal note, I want to thank-you profusely for all the love and affection you had shown me
during my association with you.

உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

CK Kumaravel Resign: இன்றும் தொடர்கிறது... மநீம.,வில் இருந்து சி.கே.குமரவேலும் விலகல்!

நடந்து முடிந்த தமிழக தேர்தலுக்கு பிறகு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் விலகுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில் அக்கட்சியில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் திடீரென விலகினார். அத்துடன், கமல் மற்றும் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். அவர் விலகிய பிறகு மக்கள் நீதி மய்யதில் இருந்து பலர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget