MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் மீது பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது. இதனையடுத்து அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வகையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) மயிலாப்பூர் மேற்கு பகுதியில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
“என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி”
ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் SIR பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எந்த ஷா வந்தாலென்ன?
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 10, 2025
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!… pic.twitter.com/k6R8qQRPHB





















