நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிகளை மீறியதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று குஷ்புவிற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ஆதரவாளர்களுடன் வழிபாட்டுத்தலத்தின் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, வழிபாட்டுத் தலங்கள் முன்பு எந்த வேட்பாளரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது.
இதையடுத்து, நடிகை குஷ்பு மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய 2 பிரிவுகளின்கீழ் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

