மேலும் அறிய

'தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி 2024? 2026? என்பதை ஆண்டவர்தான் முடிவு செய்வார்' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி 2024? 2026? என்பதை ஆண்டவர்தான் முடிவு செய்வார் என மதுரையில் நடைபெற்ற பாஜக 9 ஆண்டுகள் சாதனை விளக்கக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு. 

மதுரையில் பா.ஜ.க., சார்பில் மத்திய அரசின் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 1200 பாஜக மண்டல் தலைவர்களுக்கு வெள்ளி மோதிரத்தை வழங்கினார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்திய சரித்திரத்தில் முக்கிய  9 ஆண்டுகள் பிரதமர் மோடி ஆட்சியில் இருந்த கடந்த 9 ஆண்டுகள்தான். சாமானிய மக்களின் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்துபவர் மோடி, அதன்படிதான் ஏழை மக்களுக்கு வீடு, கேஸ் இணைப்பு உள்ளிட்டவை கிடைத்து இருக்கிறது. ஏழை மக்களை வாக்குக்காக பயன்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய கட்சி பாஜக. இந்தியா ஊழல் நாடு என்ற பெயரை மாற்றியவர் பிரதமர் மோடி. பாண்டித்துறை தேவருக்கு பின் தமிழ் மொழிக்காக துணை நிற்பவர் நமது பிரதமர் மோடி, செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியின் புகழை எடுத்துச் செல்கிறார். வருனபகவான் ஆசி நமக்கு கிடைத்து இருக்கிறது. நீங்கள் நிற்பதற்கு தயார் என்றால் நான் மழையில் பேசத் தயார். புதிய பாராளுமன்றத்தில் எந்த மொழியும் பேசப்படவில்லை. பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான்.

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி 2024? 2026? என்பதை ஆண்டவர்தான் முடிவு செய்வார்' -  அண்ணாமலை

பாராளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ அப்போதே தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமைப்போகிறது. 2024ல் அறம் சார்ந்த ஆட்சியா இல்லை 2026 அறம் சார்ந்த ஆட்சியா என்பதை ஆண்டவன் முடிவு செய்வார். திமுக ஆட்சிக்கு அறம் என்ற வார்த்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. 1200 பூத் தலைவர்களுக்கு 1200 தாமரை பொறித்த வெள்ளி மோதிரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 7 மாதம் உங்கள் உழைப்பை மக்கள் பார்த்துக் கேட்க உள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டடம் குறித்து தமிழக முதல்வர் ஜப்பானில் இருந்தே பொறுமை கூட இல்லாமல் வயிறெரிச்சலில் விமர்சனம் செய்கிறார். நாம் காங்கிரஸ் கட்சியை போல  ஊழலில் ஈடுபடவில்லை. கடுகளவும் ஊழல் இல்லாத கட்சி பாஜக. பாஜக DMK file வெளியிட்டது. அதற்கு ஆதராமாக மதுரை அமைச்சர் ஒப்புதல் வாக்கு மூலமாக முதல் குடும்பம் 30 ஆயிரம் கோடி  ஊழல் செய்ததாக கூறினார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி 2024? 2026? என்பதை ஆண்டவர்தான் முடிவு செய்வார்' -  அண்ணாமலை

அமைச்சருக்கு கிடைத்த பரிசு துறை மாற்றம் முதல்வர் குடும்பத்தை பற்றி பேசினால் என்ன கதி ஆகுமென திமுக உணர்த்தி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் பவுண்டேசன் இதற்கு முன்பு இருந்தே செயல்படுகிறது அதன் நிர்வாகியாக தற்போதய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிர்வாகியாக இருந்தார். கடந்த ஆண்டு முதல்வர் துபாய் சென்று நோபல் பிரிக்ஷ் நிறுவனத்துடன் 1000 கோடி ஒப்பந்தம் செய்து வந்தனர்.  தற்போது சட்டத்திற்கு புறம்பாக உதயநிதி ஸ்டாலின் பவுண்டேசன் நிதி வாங்கியதால் அமலாக்கத்துறை அதன் வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறது. நோபல் நிறுவனத்திற்கு அவர்களின் பணத்தை கொடுத்து இங்கே கொண்டு வருவதுதான் திட்டம் என கூறி இருந்தேன் அதற்கு ஆதாரம் கேட்டனர். இதோ இங்கே தருகிறேன், நோபல் பிரிக்ஸ்  நிறுவனத்தின் முகவரி   53/22 கே.ஜி நடராஜர் பேலஸ் சரவணா நகர், தி நகர் சென்னை. உதயநிதி ஸ்டாலின் பவுண்டேசன் நிறுவனம் இயக்கும் இடத்தின் முகவரியும் அதேதான். என்ன ஆச்சரியம் ஒரு இடத்தில் இரு நிறுவனங்களின் முகவரி இதிலேயே நீங்கள் உங்களுக்கு  பணத்தை அளித்துள்ளீர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. தமிழ்நாடு கள்ளச்சாரய மாநிலமாக திமுக அரசு மாற்றி இருக்கிறது. அங்கே ஜப்பானில் முதல்வர் சொகுசாக இருக்கும் அதே வேளையில் இங்கே கள்ளச்சாரயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பம் சோகத்தில் உள்ளது. 44 ஆயிரம் கோடி டாஸ்மார்க் வழியாக வருவாய் ஈடுட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறது திமுக. பல்வேறு தரப்பு மக்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட்டு பிரதமர் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் 39 எம்.பிக்கள் நமது கூட்டணியோடு நாடாளுமன்ற செல்ல வேண்டும்” என்றார்.

அண்ணாமலை  பேசத் துவங்கிய சில நிமிடங்களில் மழை பெய்யத் துவங்கயது அதனயும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழைக்கு நடுவே பேசினார். முன்னதாக  பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவங்களில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பெண்கள் மேடைக்கு  கொண்டுவந்து வழங்கி மேடையில் வைக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஸ்ரீ ராம ஸ்ரீநிவாசன், மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget