மேலும் அறிய

Annamalai: ’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை

இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்த அதிரடி திட்டம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் 'We the Leaders' அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

எப்படி வாங்கினேன்?

ஆம். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.

நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது.

இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப் பதிவு, முத்திரைத் தாள் மற்றும் இதர கட்டணம் என ₹40,59,220 செலுத்தியுள்ளோம்.

எனது முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து

மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன், அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்.

விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனம்

நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதில் இருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.

இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள்.

குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
CV Shanmugam : சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
Embed widget