'சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க EPSயிடம் சொன்னோம்’ ரகசியம் சொன்ன செங்கோட்டையன்..!

கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன், ஒபிஎஸ் ஆகியோரை மீண்டும் அதிமுக சேர்க்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமியை நான் உள்பட 6 பேர் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள பக்குவமும் மனநிலையும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நான், வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், அன்பழகன் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து சொன்னோம் என்று ரகசியத்தை செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். தனியாக இருந்தால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் செங்கோட்டையன் முக்கிய பேட்டியை அளித்துள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















