(Source: ECI/ABP News/ABP Majha)
முதல்வர் பற்றி அதிமுக கவுன்சிலர்கள் பேசியதால், திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் - சேலத்தில் பரபரப்பு
பதற்றத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் கள்ள சாராயம் மதுபான விற்பனை வன்மையாக கண்டிப்பதாக கோஷம் எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் துவக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் இமயவர்மன் பேச துவங்கினார். அப்போது சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு நாளில் கல்வெட்டில் அதிமுக கவுன்சிலர் உட்பட 60 கவுன்சிலர்களின் பெயர்களையும் பொறிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயரிடம் முறையிட்டார். உடனே எழுந்த அதிமுக கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து அதிமுக, திமுக கவுன்சிலர்களே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
குறிப்பாக அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி என்பவர் தனது வார்டில் அரசு திட்டப்பணிகளை துவங்கும்போது அது குறித்து தகவல்களை அரசு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை எனவும், எந்த நிதியில் பணிகள் நடைபெறுவது என்பது குறித்து தகவல் கொடுப்பதில்லை என்று கூறி மாநகராட்சி மேயரிடம் முறையிட்டார். அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் திமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு இருக்கும் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் திட்ட பணிகளை துவங்கும்போது திமுக கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுக்கிறார்களா? என்று பதில் கேள்வி எழுப்பினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தகவல் கொடுக்கவில்லை என்று தான், கேள்வி எழுப்பியதாக அதிமுக கவுன்சிலர் கூறுகையில் இதற்கு ஏன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் பேசினார். உடனே மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இரண்டு தரப்பு கவுன்சிலர்களையும் சமாதானப்படுத்தினார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் கடும் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தமிழக முதல்வர் திறப்பு விழா செய்ய சேலம் வருகை தர உள்ளார் என்று அதிமுக கவுன்சிலர் கூறியதையடுத்து திமுக கவுன்சிலர் அனைவரும் எழுந்து கடும் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது. அப்போது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மாறி, மாறி அவர்கள் ஆட்சியில் நடந்த தவறுகளை பேசி சத்தம் எழுப்பினர். பின்னர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யாதவமூர்த்தி, திமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சிக்கு எந்த விதமான நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தமிழக முதல்வர் வருகை தந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாநகராட்சிக்கு ஒரு சாலை கூட இதுவரை அமைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
அப்போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி கண்டன கோஷம் எழுப்பினார். அப்போது பதற்றத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் கள்ளசாராயம், மதுபான விற்பனை வன்மையாக கண்டிப்பதாக அதிமுக கவுன்சிலர்களே மாற்றி கோஷம் எழுப்பினர்.