'அண்ணன் திருமா'கிட்ட பேசிட்டு ஒரு முடிவை சொல்லுங்க..! விசிக சவாலை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன் விடுத்த சவாலை ஏற்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலையின் பேச்சு..
பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஏப்.20ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு சவால் விட்டார். "இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன்.
இதற்கு பதில் கொடுத்த திருமா, ’’பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம் என்றார்.
26ந்தேதி கச்சேரி இருக்கு... @annamalai_k pic.twitter.com/m7RbB2rPAq
— U2 Brutus (@U2Brutus_off) April 22, 2022
சங்கத்தமிழன் சவால்..
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் ஒன்றை விடுத்தார். அதில், '' 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள் என்றும் கூறுகிறார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, '' 24ம் தேதி பிஸியாக இருப்பதாகவும், 26ம் தேதி நேரில் சந்திக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்.
ட்விட்டர் பதிவு..
இந்தநிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன் விடுத்த சவாலை ஏற்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு!
தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!
— K.Annamalai (@annamalai_k) April 24, 2022
3/3
தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்! என்று பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதிவிற்கு இணையவாசிகள் பலரும் 26ம் தேதி நேரடி விவாதம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

