மேலும் அறிய

Vishal : மீண்டும் அரசியலில் குதிக்கப்போகும் விஷால்... இம்முறை எங்கே தெரியுமா?

சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிகரமாக 3 ஆண்டுகள்:

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது, இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது. பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து  ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜெகன் மோகன் வியூகம்:

கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இம்முறையும் தனித்து களம் காண உள்ளார், கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வரும் சூழ்நிலையில், அதிலும் குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏன் நடிகர் விஷாலை தேர்வு செய்கிறார் ஜெகன் மோகன் ?

சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும். குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே   தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர், இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த போது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலை அமைச்சர் பரிந்துரைக்க காரணம்?

ஏற்கனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார். நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்தி வந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது. பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான்  அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலுக்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget