கனிம வளம் கடத்தல் ; முக்கிய புள்ளியின் 'பெயரை' வெளியிட்ட அன்புமணி ! யார் அந்த முக்கிய புள்ளி ?
தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் சமூக நீதி கணக்கெடுப்பு அவசியம் - அன்புமணி

திருப்பூர் : தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளைக்கு காரணமான திமுக புள்ளியின் பெயர் 'அப்பாவி' என்றும் தமிழ்நாட்டில் 25 லட்சம் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க வேண்டுமானால் சமூக நீதி கணக்கெடுப்பு அவசியம் என்றும் கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்ற கடனை விட இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு பெற்ற கடன் தான் அதிகம்; புள்ளி விவரங்களுடன் பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு.
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசி கடை வீதியில் பொது கூட்டத்தில் பேசினார்.
திருப்பூரை மாநகரம் என்று சொல்வதற்கே எனக்கு அசிங்கமாக உள்ளது காரணம் எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதியும் இங்கு தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை. திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இந்த கொங்கு பகுதி மட்டும் இந்திய அந்நிய செலாவணியில் 73 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி கொடுக்கிறது. திருப்பூர் மற்றும் 15000 கோடி அந்நியசலானியை ஈட்டு கொடுக்கிறது.
இன்று காலை நொய்யல் ஆற்றை சென்று பார்த்தேன். திருப்பூரில் ஒரு சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது அதற்கு பெயர் தான் நொய்யல் ஆறு என்ற நிலை உருவாகிவிட்டது. 'நோய்களைப் போக்கும் ஆறு' அதுதான் நொய்யல் ஆறு அப்படி இருந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? அனைத்து விதமான கழிவுகளும் அந்த ஆற்றில் தான் விடப்படுகிறது.
கோவை அடுத்த வெள்ளையங்கிரி மலையில் மூலிகைகள் இருக்கும் அங்கிருந்து உருவாகி வரும் ஆறு என்பதனாலே மூலிகை கலந்து வருவதால் பலவிதமான நோய்களை தீர்க்கும் ஆறாக இந்த நொய்யல் ஆறு இருந்தது. சென்னையில் கூவம் ஆறு, மதுரையில் வைகை ஆறு என தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறும் செத்துக் கொண்டிருக்கிறது அதனை மீட்டெடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் 25 லட்சம் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.
இன்றைக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது கஞ்சா நாடு என்று மாற்றப்பட்டுள்ளது ஏனென்றால் எங்கு பார்த்தாலும் கஞ்சா இருக்கிறது. நகரம் கிராமம் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா கிடைக்கிறது. 2021 இல் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் ஒன்பது சதவீதமாக இருந்தது தற்போது அது பதினைந்து சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 லட்சம் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதற்குக் காரணம் திமுக ஆட்சி போதை பொருளை தடுக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி. என்னிடம் ஆட்சி இருந்தால் 6 நாட்களில் தமிழ்நாட்டில் போதை பொருளை ஒழித்துக் காட்டுவேன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது பல்வேறு சாதனைகளை செய்து காட்டி இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீனவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட எவருக்கு எந்த பிரச்சனையானாலும் உடனே முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு தன்னுடைய பணி முடிந்தது என்று நிறுத்திக் கொள்கிறார். இதற்கு எதற்கு ஒரு முதலமைச்சர்?
திருப்பூரில் லட்சக்கணக்கான குடும்பங்கள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்க கூடாது. திமுகவிற்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியவில்லை. மணல் மழையை கொள்ளை அடிப்பது மட்டும்தான் திமுகவினருக்கு தெரியும்.
தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீனவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட எவருக்கு எந்த பிரச்சனையானாலும் உடனே முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு தன்னுடைய பணி முடிந்தது என்று நிறுத்திக் கொள்கிறார். இதற்கு எதற்கு ஒரு முதலமைச்சர்?
திருப்பூரில் லட்சக்கணக்கான குடும்பங்கள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. நம்முடைய பக்கத்து மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளாவில் ஆற்று மணலை எடுக்கவும், மலையை வெட்டி எடுக்கவும் தடுக்க சட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி எதுவும் சட்டம் இல்லை.
கனிம வள கடத்தலுக்கு துணையாக இருக்கும் முக்கிய புள்ளியின் 'பெயரை' வெளியிட்ட அன்புமணி
தென் மாவட்டங்களில் கனிம வள கொள்ளை நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக ஒரு 'காட்பாதர்' இருக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு தினசரி 800 800 க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமானவர் ஒரு முக்கிய புள்ளி. அவர் பெயர் 'அப்பாவி'.. அவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ஏற்கனவே பல கட்சிகளில் இருந்தவர் தற்போது திமுகவில் இருக்கிறார். இந்த கனிமவளை கொள்ளையை ஏதாவது ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினால் உடனே அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவார். விரைவில் சிபிஐ விசாரணை நடக்கும் 5-6 மாதங்களில் இவர்களெல்லாம் சிறைக்கு செல்வார்கள்.
சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? - அன்புமணி யோசனை
சாதியால் ஏற்படுகின்ற அடக்குமுறைகளை அழிக்க வேண்டும். அதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் மையக் கொள்கை. ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என மனநிலையை போக்க வேண்டும். சினிமாவிலோ மேடையிலோ பேசுவதனால் சாதி ஒழிந்து விடாது. இந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்க வேண்டுமானால் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயத்திற்கும் நல்ல படிப்பும் வேலையும் கொடுக்க வேண்டும் அதற்கு கணக்கெடுப்பு அவசியம்.
தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் எந்தெந்த சாதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன யார் யாருக்கு படிப்பு கிடைத்துள்ளது யாருக்கு படிப்பு கிடைக்கவில்லை? யாருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உண்மை நிலை தெரிய வரும். பிரச்சனை தெரிந்தால் தானே அதற்கு தீர்வு கொண்டு வர முடியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று வைத்துக் கொள்ளலாம் அதுவும் பிடிக்கவில்லை என்றால் திமுகவினர் கலைஞர் கணக்கெடுப்பு என்று கூட வைத்து க் கொள்ளலாம்.
தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து சமூக நீதியை நிலைநாட்ட முடியும் ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இதனை செய்வதற்கு மனது இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தரம் குறைந்து வருகிறது; போதுமான ஆசிரியர்கள் இல்லை
தமிழ்நாட்டில் 37,500 அரசு பள்ளிகள் இருக்கின்றன. 12,500 தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வெறும் 12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 37 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் வெறும் 52 லட்சம் பேர் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஓர் ஆசிரியர் அரசு பள்ளிகள் 4000 பள்ளிகள் இருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் அரசு பள்ளியை வைக்கிறார்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் தரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது முன்பு போல அரசு கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்வது கிடையாது தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 180 கல்லூரிகளில் 100 கல்லூரிகளில் முதல்வர்கள் கிடையாது. மொத்தம் ஒதுக்கப்பட்ட 10,500 உதவி பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 9000 மேற்பட்ட பணியிடங்களில் உதவி பேராசிரியர்கள் கிடையாது.
இதுதான் இன்றைய உயர் கல்வித் துறையினுடைய நிலைமையாக தமிழ்நாட்டில் இருக்கிறது. திமுக ஆட்சியில் மின்சார கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். மக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
1947 இல் இருந்து 2021 வரை தமிழ்நாடு பெற்ற மொத்த கடன் எண்ணிக்கை ரூ. நான்கரை லட்சம் கோடி. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஒன்பதரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான் திமுகவின் நிர்வாகத்திறன். யாராவது கடன் வாங்கி வட்டி கட்டுவார்களா ஆனால் திமுகவினர் கட்டுவார்கள். அங்கு வாங்கி இங்கு கட்டுவது? இங்கு வாங்கி அங்கு கட்டுவது என்று நிர்வாக ம் செய்யத் தெரியாமல் திமுக நிர்வாகம் செய்து வருகிறார்கள்.





















