மேலும் அறிய

எடப்பாடியோடு கூட்டணியா.!! திமுகவிற்கு பல்டி அடித்த அமமுக முக்கிய நிர்வாகி- சாட்டையை சுழற்றிய டிடிவி

சட்ட மன்ற தேர்தலையொட்டி அதிமுக- அமமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நெருங்கும் தேர்தல்- அதிமுக கூட்டணி வியூகம்

தமிழக சட்டப்பேரவை தேர்துலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் கட்டமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் தனது தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்து செல்லக்கூடாது என்பதற்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதில் பாஜக தங்களது அணியில் இணைந்த அதிமுக, அடுத்ததாக பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது. 

அதிமுகவில் உட்கட்சி மோதல்

அந்த வகையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் என தனி அணியானது உருவானது. அப்போது அதிமுகவை எதிர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற்றது. இதனால் எதிர்ப்பு  வாக்குகள் பிரிந்து தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.  

ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் அதிமுக

இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்ட அதிமுக, பாஜகவுடன் இணைந்து அமமுகவை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை'என டிடிவி தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன், இந்த முடிவை அமமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.

திமுகவில் அமமுக நிர்வாகி

இந்த நிலையில் தான் அமமுக துணை பொதுச்செயலாளரான S.V.S.P.மாணிக்கராஜா திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஏற்றார் போல இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்ற மாணிக்க ராஜா திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அமமுக தொடங்கப்பட்ட நோக்கமே நிறைவேறவில்லை என்ற காரணத்தால்  அமமுகவில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.   

இந்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget