EPS vs OPS: பிரிந்து கிடக்கும் இரட்டை குழல் துப்பாக்கி! பிரியுமா அதிமுக? யார் ஆதரவு யாருக்கு...?
எங்களது ஆதரவு இவர்களுக்குதான் என மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தனித்தனியே கடந்த 6 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்தான் வர வேண்டும் என பல்வேறு மாவட்ட செயலாளர்கள் குரலெழுப்பி, அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில், ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்படும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இப்படியே இரட்டை தலைமை இருந்தால் அது என்றோ ஒருநாள் ஆபத்தாக முடியும் என அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்து விட்டனர். இதன் காரணமாக வருகிற ஜுன் 23 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலுவான கோரிக்கை எழுந்து வருகிறது.
இப்படி ஒருபுறம் இருக்க, மறுபுறம் எங்களது ஆதரவு இவர்களுக்குதான் என மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன்படி யார் யார் ஆதரவு யாருக்கு என இங்கே பார்ப்போம்.
ஓபிஎஸுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் யார்..?
- மைத்ரேயன்
- வைத்தியலிங்கம்
- வெல்லமண்டி நடராஜன்
- எம்.சி.சம்பத்
இபிஎஸுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் யார்..?
- நத்தம் விஸ்வநாதன்
- திண்டுக்கல் சீனிவாசன்
- செங்கோட்டையன்
- செல்லூர் கே.ராஜு
- தங்கமணி
- எஸ்பி வேலுமணி
- ஜெயக்குமார்
- சிவி சண்முகம்
- அன்பழகன்
- கருப்பண்ணன்
- காமராஜ்
- உடுமலை ராதாகிருஷ்ணன்
- விஜயபாஸ்கர்
- அமைப்பு செயலாளர் பொன்னையன்
- கடம்பூர் ராஜு
- ஆர்.பி.உதயகுமார்
- வீரமணி
- ராஜேந்திர பாலாஜி
- வளர்மதி
ஆகியோர் தற்போது வரை ஆதரவாக செயல்ப்பட்டு வருகின்றனர்.
மேலும், அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 60க்கு மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய தம்பிதுரை தற்போது ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை புரிந்து சமரச பேச்சில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

