மேலும் அறிய

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்!

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சத்துணவு துறையில் இரண்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாகவும், தொழில் விசயமாக ஆகவும் 60 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டார் எனவே அவரை விசாரணை செய்ய வேண்டும் என பேசியதால் சர்ச்சை.

சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்!

இது தொடர்பாக பேசிய ஏ.வி.ராஜு, "சத்துணவு துறையில் இரண்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாயும், தொழில் விசயமாக ஆக 20 லட்ச ரூபாயும் என அறுபது லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டார். இதுபோல அவர் பலரிடம் ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் 800 கோடியை தாண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. திமுக அமைச்சராக இருந்த பொன்முடி மீது அமலாக்கத்துறை சொத்து குவிப்பு வழக்கு போட்டு அவரை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கூறிய அவர், வெங்கடாசலம் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் நீடித்தால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் அதிமுகவிற்கு குறையும் என்றும், எனவே உடனடியாக அப்பதவியில் இருந்து வெங்கடாசலத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீது அதே கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜ், வைத்துள்ள குற்றச்சாட்டு சேலத்தில் மட்டுமல்லாமல் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் இடம் தொடர்புகொண்டு கேட்டபோது, எந்த தவறும் செய்யாத என் மீது அவதூறு கருத்து பேசிய ஏ.வி.ராஜு மீது தலைமை கழகத்தில் புகார் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்!

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பில் சேலம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு, அதிமுகவின் ஒழுங்குமுறை குலைக்கும் வகையில் அதிமுக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget