AIADMK case: அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி மாற்றம்
அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெவித்துள்ளது.
அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெவித்துள்ளது. ராயபேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கமால் ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ட்குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெவித்துள்ளது. அதனை தொடர்ந்து, இவ்வழக்கை வழக்கு செப்டம்பர் 19- தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வழக்கின் பின்னணி
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கடந்த மாதம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்த அதே வேளையில் பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு மோதல் எழுந்ததாகவும், மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் அவரது குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் மனு தாக்கல் மனுவில், அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அதில் அதிமுக அலுவலக சுவாதீனம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சனை இருந்ததாகவும்,அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குண்டர் படையினர் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்ததாகவும் அந்த புகாரை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கவில்லை எனவும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகு ரசீது கிடைக்க பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எதிர்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சீலை அகற்றி சாவியை இடைக்கால பொதுச்செயலாளரிடம் அளிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர் அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக கடந்த மாதம் 23ஆம் தேதி புகார் அளித்ததாகவும் ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் இந்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி இந்த விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.