மேலும் அறிய

AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

அதிமுக உள்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதிமுக உள்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.  

இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. அன்று நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ் ஈபிஎஸை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியளித்தார். 

AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான ஓபிஎஸ் மகன்களான தேனி பாராளுமன்ற எம்.பி ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், வெல்லமண்டி நடராஜன்,  முன்னாள் அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், கோபாலக்கிருஷ்ணன், எஸ். எ. அசோகன், ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 18 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.  

இதனைத்தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, ஜக்கையன் உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

AIADMK Issue: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம் - பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

முன்னதாக, அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் காரசார விவாதம் நடத்திய நிலையில், இறுதியில் பேசிய நீதிபதி பொதுக்குழு அன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரமாக சம்ர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நாளை ஒத்தி வைத்து இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்

TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி

Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்

metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!

Embed widget