AIADMK LIVE: பொருளாளர் மாற்றம் குறித்து வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம்
AIADMK General Body Meeting LIVE Updates: அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
LIVE
Background
AIADMK General Body Meeting LIVE Updates:
அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள அதே மண்டபத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று தினம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். அதேசமயம் பொதுக்குழுவுக்கு தடைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு சொல்வதாக தெரிவித்துள்ளார்.
9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த பொதுக்குழுவில் போலி அடையாள அட்டை மூலம் வெளியாட்கள் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில் இம்முறை நவீன முறையில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதாவது மெட்ரோ ரயில் நிலையம் போல தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையுடன் கூடிய மின்னணு எண் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும் வகையில் ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுக்குழு, செயற்குழு நடக்கும் இடங்களில் 20 ஸ்கேன் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட் !
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்வீட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா என பதிவு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உண்மையான அதிமுக நாங்கள்தான் - ஓபிஎஸ்
உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் - ஓபிஎஸ் தரப்பும் முறையீடு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு
ஈபிஎஸ்- ஓபிஎஸ் மனுக்கள் : தேர்தல் ஆணையம் பரிசோதணை
தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல்