Edappadi Palanisamy: பொதுக்குழு வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் இபிஎஸ் வழக்கறிஞர்!
பொதுக்குழு நடத்த தடைக்கேட்ட வழக்குகளில் எந்த முகாந்திரமும் இல்லாத காரணத்தால் நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து விட்டதாக ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
பொதுக்குழு நடத்த தடைக்கேட்ட வழக்குகளில் எந்த முகாந்திரமும் இல்லாத காரணத்தால் நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து விட்டதாக ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் பேசும் போது, “அதிமுக சார்பில் நாளை நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று சண்முகம், பழனிசாமி மகன் சுரேன், ராம் குமார் ஆதித்தன், தணிகாச்சலம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மூன்று வழக்குகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்ததோடு நாளை பொதுக்குழு நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் 23 ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் பாலக்கிருஷ்ணன் என்பவர் இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக தரப்பில் முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் விஜயநாரயணன் ஆஜராகி பொதுக்குழு நடைபெறுவது இயல்பான செயல், இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை பொதுக்குழுவிற்கு எந்த வித தடையில்லை என்று உத்தரவிட்டார்.” என்று பேசினார்.
View this post on Instagram
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் நாளை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எந்தத்தடையும் இன்றி பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அதிமுக தீர்மானங்களை மாற்றவும் எவ்வித தடையில்லை எனவும் உயர்நிதிமன்ற நீதிபதி உத்தரவில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.