மேலும் அறிய

பறிக்கப்படுகிறதா ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி? வெளியான பரபரப்புத் தகவல்..

இன்று நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுக்குழுக் கூட்டம் ரத்து:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் காலியாக விடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்தது.

இதனையடுத்து தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ம் தேதி தொடங்கியது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டு அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவை விட்டே நீக்கப்படலாம் என்றும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.

பறிக்கப்படுகிறதா ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி? வெளியான பரபரப்புத் தகவல்..

காரசார விவாதம்:

இதனையடுத்து சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று கூறியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதிகள் சொல்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 2,665 உறுப்பினர்களில் 2,190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் 2,432 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவெட்வுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

பறிக்கப்படுகிறதா ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி? வெளியான பரபரப்புத் தகவல்..

பொருளாளர் பதவிக்கு ஆபத்து:

இருத்தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பை இன்று காலை 9 மணிக்கு அறிவிப்பதாக கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்குமா நடக்காதா என்றே தெரியாத நிலையில் அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பொருளாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு

Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்

ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?

அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி

Embed widget