மேலும் அறிய

செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..

EPS - Sengottaiyan: செங்கோட்டையன் குறித்து கேள்விக்கு, அதிமுகவை யாராலையும் உடைக்க முடியாது; முடக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் , உங்களுடுனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

”ஏன் செங்கோட்டையன் சந்திக்கவில்லை”

அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ ஏங்க, எங்களை பிரித்து பார்ப்பதிலையே குறியாக இருக்கிறீங்க, நல்லா, உசாரா கேள்வி கேக்குறீங்க, எப்ப பார்த்தாலும், குழப்பம் வரனும்னு இருக்கிறீங்களே தவிர, ஒற்றுமையாக இருக்கனும்னு நினைங்க, நாங்க ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், எங்களை யாராலையும் பிரிக்க முடியாது , எப்போ நான் முதலமைச்சர் ஆகினேனோ, அப்போது இருந்து, இந்த திட்டத்தை போட்டுக் கொண்டுதான் இருக்காங்க, ஆனால் அதையெல்லாம் உடைச்சிக்கிட்டுதான் இருக்கோம். அதிமுகவை யாராலையும் உடைக்க முடியாது; முடக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்; மூக்குடைந்து போகும் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விளக்கமளித்தார். 

செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..

இபிஎஸ் - செங்கோட்டையன் சர்ச்சை:

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையனுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் வெட்ட வெளிச்சமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சில தினங்களுக்கு முன்பு, போஸ்டரில் அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த செங்கோட்டையன், தொடர்ந்து பல சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தார். அதிமுக கட்சிக்குள்ளேயே தனது ஆதரவாளர்களை திரட்டி ஈபிஎஸ்க்கு எதிராக அணி சேர்ப்பதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன் மேடையிலேயெ பெயர் குறிப்பிடாமல் பேசி ஈபிஎஸ் மீதான அதிருப்திகளை கடுமையாக வெளிப்படுத்தினார்.

Also Read: செங்கோட்டையன் விளக்கம்...சபாநாயகரை சந்தித்தது ஏன்?

வெடிக்கும் அதிமுக உட்கட்சி பிரச்னை

இவ்வளவு நாள் இலைமறைக்காயாக இருந்த பிரச்சனை இந்த மேடையில் வெட்டவெளிச்சமானது. இதனையடுத்து வைகைச்செல்வன் உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு எதிராகவும் ஓபிஎஸ் சசிகலா என இபிஎஸ் எதிர்ப்பாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் பேசி அதிமுகவே இரண்டாக போகும் அளவிற்கு இந்த பிரச்சனையை தூண்டிவிட்டனர். இப்படியான நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 

அதிமுகவுக்கு ஆதராவாக வாக்களித்த செங்கோட்டையன்

அதில் செங்கோட்டையன் அவைத்தலைவர் தனிமையில் சந்தித்தது பேசுபொருளானது. அதற்கு விளக்கமளித்து செங்கோட்டையன் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் வாக்கெடுப்பின் போது செங்கோட்டையன் அதிமுகவுக்கு ஆதரவளிப்பாரா இல்லை எடப்பாடி மீதுள்ள கோபத்தை இதில் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில்  சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில்,அதிமுகவுக்கு ஆதரவாக செங்கோட்டையன் வாக்களித்தார். 

அதிமுகவுடன் பிரச்னையே இல்லை

நாம் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக செயல்பட வேண்டும் நமது பிரச்சனைகளை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி எம் எல் ஏக்கள் சிலரை தூது அனுப்பி செங்கோட்டையனை சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தனது கட்சிக்கு விஸ்வாசமாக செயல்பட்டுள்ளார் செங்கோட்டையன். எனினும் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.  இதில் ஓபிஎஸ்_ம் அதிமுகவுக்கு ஆதராவாக் வாக்களித்திருக்கிறார். 

இந்நிலையில், இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத்தான் செங்கோட்டையன் நிலைப்பாடு இருப்பதாகவும், அவர் எப்போதும் அதிமுகவின் விசுவாசிதான் என்றும் கருத்துகள் எழுவதை பார்க்க முடிகிறது. 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!

Embed widget