மேலும் அறிய

பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

பாஜக உடன் கூட்டணி அமைத்தபின், பல்வேறு களேபரங்களுக்கிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்து, அரசியல் களம் களேபரமாகியுள்ள நிலையில், வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

பாஜக-அதிமுக கூட்டணி களேபரம்

நீண்ட இழுபறிக்குப் பிறகு, அதிமுக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காக, பாஜக அதன் தமிழ்நாடு தலைவரையே மாற்றியுள்ளது. அதிமுக உடன் நெருக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரன் தலைவராக அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

அதிமுக பக்கமோ, பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனம் ஒருபுறம், பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியிலிருந்து விலகியது என தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறிவந்த நிலையில், தற்போது, நீட் தேர்வு சிக்கலை போக்க அதிமுகவிற்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்று அதிமுக சொல்லுமா என்ற கேள்வி ஆளும் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இப்படி, பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அதிமுக பெரும் தலைவலியை சந்தித்து வரும் சூழலில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு

இப்படிப்பட்ட சூழலில், வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget