மேலும் அறிய

‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!

‛சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைக்கவில்லை ஊடகங்கள்தான் நினைக்கிறது’ -கேபி முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விருப்பமான வினியோகம் இன்று துவங்கியது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி விருப்பமனு வினியோகத்தை துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி  சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த முனுசாமி,  அதிமுக தலைவர்கள் நிர்வாகிகள் ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் இதைப் பற்றி நினைக்கவில்லை. நினைக்காத ஒரு விஷயத்தை ஊடகங்கள் ஏன் ஞாபகப்படுத்துகிறது, என்றும்  ஊடகங்கள் நாங்கள் நினைக்காதது போல் நீங்கள் மறந்துவிட வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சிறிது காலம் தொலைபேசியில் பேசினார்.  தற்போது கல்வெட்டு மூலமாக பேசி வருகிறார். சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை, திருமதி சசிகலா உண்மையாக ஜெயலலிதா மீது பற்று பாசம் இருந்தால் இந்த இயக்கத்தை வாழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

 


‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!


அதிமுக ஆட்சியில் மழைநீர் கால்வாய்கள் புனரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெறப்பட்ட நிதி ஊழல் நடந்திருப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, தமிழக முதலமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது கடந்த கால ஆட்சி இந்தியாவில் முதன்மை மாநிலம் என பல விருதுகள் பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் குற்றம் சாட்ட கூடாது. தன்னால் முடியவில்லை என்று வரும்போது எதிரிகள் மீது குற்றம் சுமத்துவது சராசரி மனிதனின் குணம். ஆனால் முதலமைச்சர் சராசரி மனிதர் அல்ல,  அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் வழங்கிய அந்த பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இடம் வழங்கியுள்ளனர். அவர் அதனை செய்ய வேண்டும் அதை விடுத்து எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு நீங்கள்  எதற்கு. ஒதுங்கி விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியவர் கடந்த ஆட்சியில் 24 மணி நேரத்தில் மழை நீர் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய புயல் நேரங்களில் ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது ஒரே நாளில் கடலூர் சாலை புனரமைக்கப்பட்டது. 

 


‛சசிகலாவின் கல்வெட்டு பேச்சு...’ -போட்டு உடைக்கும் கேபி முனுசாமி!

 

தற்போது இந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இணக்கமான ஒத்துழைப்பு இல்லை, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தான் தற்போதும் உள்ளனர். ஆனால் ஏன் பணிகள் செயல்படுத்த முடியவில்லை என்றால் வழி நடத்தக்கூடிய திறமை இந்த ஆட்சிக்கு இல்லை என குற்றம் சுமத்தினார். மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. நல்ல சிந்தனை உள்ள தலைவராக எதிர்க் கட்சிகளை மதிக்க கூடிவராக இருந்தால் ஜெயலலிதா அவர்கள் இந்த நாட்டிற்கு பல்வேறு அர்ப்பணிப்பான பணிகளை செய்திருக்கிறார்கள் என கருதி மேல்முறையீடு  செய்வார் என நம்புகிறேன். 

 அதிமுக எனும் இயக்கம் எப்படி கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது அதேபோல் தற்போது தலைமை ஏற்று இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கடந்த தலைவர்களைப் போல் இவர்களும் வழிநடத்திச் செல்வார்கள் என்று தெரிவித்த முனுசாமி, கே ஏ செங்கோட்டையன் அதிமுக வழிகாட்டு குழு கூட்டத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்கிற கருத்து தொடர்பாக கேள்விக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களது கருத்துக்களை சொல்ல முழு அதிகாரம் உள்ளது அது போல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
ரேஷன் கடை வரிசைக்கு வழியில்லை... டாஸ்மாக்கிற்கு ஆன்லைன் வசதியா? - அன்புமணி எச்சரிக்கை!
ரேஷன் கடை வரிசைக்கு வழியில்லை... டாஸ்மாக்கிற்கு ஆன்லைன் வசதியா? - அன்புமணி எச்சரிக்கை!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget