மேலும் அறிய

Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

Raghava Lawrence Politics : நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களம்

தமிழகத்தில் நாள் தோறும் புதிய புதிய அரசியல் மாற்றங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்த நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவான தவெக ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக எந்த வித தகவலையும் லாரன்ஸ் உறுதி செய்யாத நிலையில், கடந்த வாரம் தனது அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார்.

அரசியலில் ராகவா லாரன்ஸ்

இந்த நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எனது கடமையை உண்மையுடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம் என தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், நான் ஒருநாளும் அரசியலுக்குள் வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ, எந்தப் பதவியையும் தேட வேண்டும் என்ற விருப்பமோ எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார். 

நான் நம்பிக்கை வைத்த ஒருவரும், எனக்கு நெருக்கமான ஒருவரும் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு துணையாக நின்று, அவர்களுடன் இணைந்து, நான் தனிப்பட்ட முறையில் செய்து வந்த சமூகப் பணிகளைவிட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால், இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் என்னை அரசியலில் களமிறங்க வேண்டிய ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளன.

10 மணிக்கு முக்கிய அறிவிப்பு

அந்த வகையில் இன்று காலை 10  மணிக்கு நான் வெளியிடவுள்ள காணொளியில், அரசியல் குறித்த எனது பார்வை, அது என் வாழ்க்கையில் எப்படி வந்தது, என் தாயாரின் அரசியல் குறித்த எண்ணங்கள், மேலும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து, என் மனதில் உள்ளதை எந்த மறைப்பும் இல்லாமல், முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அந்தக் காணொளியை இறுதி வரை பார்த்து, உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், நான் எடுத்து வைக்கும் இந்த முக்கியமான பயணத்தில், உங்கள் ஆதரவும், அறிவுரைகளும், ஆசீர்வாதங்களும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என அந்த பதிவில் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
கல்வி, சமூகநீதிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget