மேலும் அறிய

திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

தை திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, "விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால் முன்னோர்கள் கூறியது, தை பிறந்துள்ளது திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும்.

நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள், வெயில், மழையை பார்க்காமல் தயாரித்து மக்களுக்கு அரிசி வழங்கும் விவசாயிகளின் உன்னதமான நாள் தை திருநாள். உணவில்லாமல் வாழ முடியாது உணவை உற்பத்தி செய்து வழங்கும் திருநாள் விவசாயிகள். நானும் ஒரு விவசாயிதான். வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும்போது எப்படி மகிழ்ச்சியப்படுகிறது. அதேபோன்று தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளேன். கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தான் தைத்திருநாளின் அருமை தெரியும். நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள்தான். எவ்வளவு கிராமங்கள் வளர்ச்சி அடைகிறதோ?, விவசாயிகள் உற்பத்தி பெரிதாகும் அப்பொழுது நாடு வளர முடியும். நாட்டு மக்களுக்காக உணவை தயாரிக்கின்ற விவசாயிகளின் தைத்திருநாள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

மேலும், இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மையை பார்த்தார்கள்? ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. இரண்டரை ஆண்டு காலத்தில் மக்களிடம் கொள்ளையடித்ததுதான் திமுகவின் சாதனை. நாட்டு மக்களை பற்றியும், மக்கள் படும்பாடு குறித்து கவலையில்லை. பல்வேறு துறைகளில் பல்லாயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து திமுக ஆட்டம் போட்டு கொண்டுள்ளது. சிலர் சிறையில் உள்ளனர், பலர் சிறைக்குச் செல்ல இருக்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், எப்பொழுது திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திமுக அரசில் நிர்வாக திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் ஆகவே உள்ள ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மோசமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது. ஏழையின் மக்களுக்கு வழங்கும் நியாய விலைக்கடை பொருட்கள் முறையாக வழங்க வேண்டும்.

நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழை வெள்ள பாதிப்பில் மக்களை காத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம். நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு தடுப்பணைகள் அதிக அளவில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சி அதிமுக அரசாங்கம் என்ற சிறப்பு பெற்றோம். நீர் நிலைகள், ஏரி குளங்கள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்து அம்மா மினி கிளினிக் திட்டம் துவக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசாங்கம் முடிந்தது. புதிய திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை. நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய அற்புதமான திட்டங்களை மூடிய பெருமை திமுக அரசாங்கத்தில் தான் உள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்தியது. ஏழை மாணவர்கள் திமுக அரசுக்கு எதிரானவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஏழைகளுக்காக திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எங்கும் இல்லை.. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனைகள். விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு நல்ல அரசாங்கமா இருந்தால் முறையாக செயல்படுத்தி இருக்க வேண்டும். கொள்ளையடிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளது திமுக அரசாங்கம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முக்கிய முக்கியமான தேர்தல். திமுக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தலாக அமையும். நாடாளுமன்றத் தேர்தல் திமுக அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். திமுக அரசகாரத்தை அகற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சேலம் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமென்றாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யலாம், ஆனால் சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுகதான். தமிழகத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். சேலம் தலைவாசலில் ₹1000 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கால்நடை பூங்கா தற்போது வரை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது; ஆயிரம் கோடி ரூபாய் முடங்கி கிடப்பது வேதனை அளிக்கிறது.

மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் கொள்ளையடிக்கும் வகையில் மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது‌. கொள்ளை அடிக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாகவும், திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுபோல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது. சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்தியாவிலேயே அதிகமான வாக்கு எண்ணிக்கையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget