பாஜக எங்களை இயக்குகிறதா? நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்
கரூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரூர் வருகை தந்தார்.
![பாஜக எங்களை இயக்குகிறதா? நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் A 50-year-old AIADMK symbol has come under attack in Karur TNN பாஜக எங்களை இயக்குகிறதா? நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/4b0660c4d755b5e11edbb036fb10fcff1675158065781183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாஜகவும், எடப்பாடி அணியினரும் அவர்களது நிலைப்பாடு என்ன என்பதைக் கூற இன்று இரவு 12 மணி வரை கெடு விதித்துள்ளதாக கரூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி.
கரூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரூர் வருகை தந்தார். அப்பொழுது மாநகர செயலாளர் ரமேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது இரட்டை இலை. 50 ஆண்டுகால அதிமுக சின்னத்திற்கு சோதனை வந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு எடப்பாடி அணியினர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஓபிஎஸ் அவர்களை கையெழுத்து போட அனுமதித்தால் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம். இன்று இரவு 12 மணி வரை அதற்கான கெடு விதித்துள்ளோம். ஆனால், ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை கைப்பற்ற நினைத்தால் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணியினருக்கு நல்ல பாடத்தை கற்றுத் தருவோம்.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள் ஒரு காலத்திலும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், இபிஎஸ் எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. பாஜக எங்களை இயக்க நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை. யாருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்போம்.
பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தோம். பாஜக எங்களிடம் கேட்டுக் கொண்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆதரவு தருவோம்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)