1Year of CM MK Stalin: ஓராண்டில் அமைச்சர்கள் காட்டிய அதிரடி! - டாப் 5 யார்?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்து ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்து, அறிவித்து செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று மக்களே சொல்லும் அளவிற்கு அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்.
இந்த ஓராண்டை வெற்றிகரமாகக் கடத்த ஸ்டாலின் என்ற தனியொரு ஆளால் மட்டும் சாத்தியமே இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் சேர்ந்துதான் தேரை ஓராண்டு இழுத்திருக்கின்றனர். போரில் அரசன் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், நல்லாட்சி நடத்துவதும், கெட்ட பெயர் எடுப்பதும் அரசன் என்ற தனி நபரால் மட்டும் இல்லை. அவருடன் இருக்கும் அமைச்சர்களும், தளபதிகளின் செயல்களால் வருவதும்தான். இந்த ஓராண்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த நற்பெயர் ஸ்டாலின் என்ற தனிநபரால் மட்டும் கிடைத்ததில்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் செயல்பாடுகளாலும்தான்.
மருத்துவத்துறை
திமுக ஆட்சிக்கு வந்தபோது தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினை கிடந்தது. குறிப்பாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லை. மருத்துவமனை நிரம்பி வழிந்தது. பலர் மருந்துகள் கிடைக்காமலும், மருத்துவம் கிடைக்காமலும் இறந்து கொண்டிருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மா.சுப்பிரமணியனை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தார் ஸ்டாலின். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவம் படித்த விஜயபாஸ்கர் இருந்த நிலையில், மருத்துவம் பற்றிய அனுபவம் இல்லாத மா.சுப்பிரமணியனை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.
ஆனால், இவரால் முடியுமா என்று ஆச்சரியப்பட்டவர்களால் இவரால் எப்படி முடிந்தது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தனது செயல்பாடுகளால் சுகாதாரத்துறையை அசரடித்து வருகிறார். போர்க்கால அடிப்படையில் படுக்கைகள் ஏற்பாடு செய்தது, கட்டுப்பாட்டு மையங்களைத் திறந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தது, தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து நிலைமையை விளக்கியது, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே மாற்றியது, லட்சக்கணக்கில் பணம் புரண்டு கொண்டிருந்த பணி மாற்றலை, பத்து பைசா செலவில்லாமல் செய்து கொடுத்தது, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று மா.சுப்பிரமணியன் செய்த சாகசங்கள் நீண்டு கொண்டே போகிறது.
நிதித்துறை
திமுக ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்கு நிதியமைச்சராக யார் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் எல்லோரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனைத்தான் கையைக் காட்டியிருப்பார்கள். அந்த அளவிற்கு இவர்தான் நம் நிதியமைச்சர் என்று எண்ணும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன். ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது பெரும் கடன் சுமையில் இருந்தது தமிழ்நாடு அரசு. பெரும் தொகையை வாங்கிய கடனுக்கு வட்டியாகவே கொடுத்துக்கொண்டிருந்தது அரசு. அதைச் சரிசெய்தால்தான் அரசின் நிதிச்சுமை குறையும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை எப்படி குறைப்பது, அரசுக்கான வருவாயை எப்படிப் பெருக்குவது, வரவேண்டிய வருவாயை எப்படிப் பெறுவது, அரசின் திட்டங்களை சரியான பயனாளர்களுக்கு எப்படி சேர்ப்பது என்று பல்வேறு திட்டங்களை அமைச்சராகப் பொறுப்பேற்றபோதே விரிவாக பேசியிருந்தார் பிடிஆர்.
இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் வருவாய் பற்றாக்குறை ரூ.7000 கோடிக்கு மேல் குறைகிறது. அதாவது நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறையும் என்று கூறியிருக்கிறார். ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது, மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான நான் முதல்வன் போன்ற திட்டங்களை அறிவிப்பது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவர் இந்தியாவின் நிதியமைச்சராக வரவேண்டும் என்று பல மாநிலத்தவர்கள் விரும்பும் அமைச்சராக உருவெடுத்திருக்கிறார் பிடிஆர்.
இந்து சமய அறநிலையத்துறை
இந்த ஆட்சியின் சர்ப்ரைஸ் அமைச்சர் சேகர் பாபு தான். கட்சி நிகழ்ச்சிகளை ஓடி ஓடி ஏற்பாடு செய்யும் திறன் கொண்டவரால் அமைச்சராகவும் ஓடி ஓடி வேலை பார்க்கமுடியும் என்று நிரூபித்தவர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி என்பது கொஞ்சம் சிக்கலான துறை. கத்தியின் மேல் நடப்பதற்கு சமம். சிறு தவறு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பூதாகரமாக்கப்பட்டுவிடும் ஏரியா அது. அறநிலையத் துறையால் இவற்றையெல்லாம் செய்ய முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சேகர்பாபு.
இன்னும் சிறப்பாகச் செயல்படும் அமைச்சர்கள் யார் யார்?
டாப் 5 அமைச்சர்கள் குறித்து வீடியோ வடிவில் காண: