மேலும் அறிய

மயிலாடுதுறையில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுத்து பசியாற்றிய தவெகவினர்....!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் மயிலாடுதுறையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று மயிலாடுதுறையில் சுமார் 500 ஏழைகளுக்கு உணவு வழங்கினர்.

நடிகர் விஜய் போட்ட உத்தரவு

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டனர். அதன் பலனாக தற்போது வரை உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, இல்லாதோருக்கு உணவு வழங்குவோம்’ என்ற கருத்துடன் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுத்து பசியாற்றிய தவெகவினர்....!

234 தொகுதிகளிலும் அன்னதானம் 

அதேபோன்று இந்த ஆண்டும் 234 தொகுதிகளிலும் உணவு வழங்க வேண்டும் என நடிகரும், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய் அறிவுறுத்தலின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புருஸ்லீ ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.  அதனை அடுத்து, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் புருஸ்லீ ஆனந்த் தொடங்கி வைத்து, சமபந்தி விருந்தில் பங்கேற்றார். தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன் 20 இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கினார்.

PM Modi Kanyakumari Visit: விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம்! பிரதமர் மோடி ப்ளான்!

மயிலாடுதுறையில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுத்து பசியாற்றிய தவெகவினர்....!

புஸ்ஸி ஆனந்த்

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தில் 23 இடங்களில் ‘தளபதி விலையில்லா விருந்தகம்’ வாயிலாக தினமும் காலை வேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களின்போது ஆதரவற்ற இல்லங்களில் வசிப்போருக்கும் உணவு அளிக்கவுள்ளனர். திருமண மண்டபத்தில் உணவு வீணாவதைத் தடுக்கும் வகையில் அங்கு சமைக்கப்படும் உணவை முதியோர் இல்லங்களுக்கு கொண்டு செல்லும் பணியையும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்வர். ஜுன் 22-ம் தேதி கட்சித் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகளைச் செய்யவுள்ளோம்” என்றார்.

மயிலாடுதுறையில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுத்து பசியாற்றிய தவெகவினர்....!

மயிலாடுதுறையில் வழங்கப்பட்ட அன்னதானம் 

இந்நிலையில் அதன் ஒன்றாக  மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்டத் இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் கட்சியினர் ஆனியன் பச்சடியுடன் வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினர்.  இதில் சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட தலைவர் குட்டி கோபி பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் அன்னதானத்தை பெற்று பசியார உண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget