மேலும் அறிய

திமுக ஆட்சியில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படுகிறது - பிஆர்.பாண்டியன்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் 1 க்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆச்சாள்புரம், மாதானம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து உள்ளதை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீர்காழி அருகே மாதாளம் கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, காவிரி டெல்டாவில் பேரழிவு பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்திருக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் கிடைக்காததால் துவக்கம் முதலே பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளனர்.

திமுக ஆட்சியில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படுகிறது - பிஆர்.பாண்டியன்

பல இடங்களில் நிலங்கள் காய்ந்து விளைச்சல் இல்லாத நிலை உள்ளது. பெரும்பகுதியா நிலங்கள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்த தண்ணீரும் மழை நீரையும் பயன்படுத்தி சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் அழியத் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையும் அழிந்துவிட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மற்றும் கதிர்வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம். திருவள்ளூர் விழுப்புரம் வரையிலும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு முழுமையிலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்தான கணக்கெடுப்பை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படுகிறது - பிஆர்.பாண்டியன்

அறுவடை நேரத்தில் பயிர்கள் அழிந்து உள்ளதால் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ஏக்கர் ஒன்றுக்கு இடுபொருள் இழப்பீடாக 25000 -ம் ரூபாய் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் பெற்று தருவதற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கடந்த 2018 முதல் காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்கிற அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது. இழப்பீடு சென்றடைவதை மாநில அரசுகள் கண்டிப்புடன் கண்காணித்திட வேண்டும். மத்திய மாநில அரசுகளுடைய பங்குத்தொகையை பெற்றுக் கொள்கிற காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளி பட்டியலை அரசுக்கு வழங்குகிறதே தவிர, அதற்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக வங்கிகளில் வரவு வைக்காமல் ஆண்டுதோறும் ஏமாற்றி வருகின்றனர். 

திமுக ஆட்சியில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படுகிறது - பிஆர்.பாண்டியன்

கடந்த அஇஅதிமுக ஆட்சி காலத்தில் காப்பீட்டுக்கான இழப்பீடு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்று பெற்றுக் கொடுக்கும் நிலை இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படும் நிலை உள்ளது என்பதை முதலமைச்சர் உணரவேண்டும். காப்பீடு திட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் தன் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் இடுபொருள் நிவாரணம் தொகை குறித்தாள விவரங்களையும், வருவாய் கிராமங்கள் தோறும் பயனாளி பட்டியலையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு செயல்படுகிறது - பிஆர்.பாண்டியன்

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் மணிக்கொள்ளை ராமச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட கவுரவத் தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம், மாவட்ட அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன், சிதம்பரம் லட்சுமி காந்தன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆனந்த், நாகராஜ்.திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் முகேஷ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget