மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?

"மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை அரிவாள் வெட்டிய திமுக பெண் கவுன்சிலர் மகன் அசோக் போலீசில் சரணடைந்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில், முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேர் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரத் தாக்குதலில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலரின் மகன், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

முன்விரோதத்தால் வெடித்த மோதல்

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அறுபத்துமூவர்பேட்டை, தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவரது மனைவி கற்பகம் (வயது 42). இந்தத் தம்பதியினருக்கு கவியரசன் (வயது 14) என்ற மகன் உள்ளார். செல்வத்தின் வீட்டிற்கு எதிரே வசித்து வருபவர் ஜெயலட்சுமி முருகன். இவர் மயிலாடுதுறை நகராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் ஆவார். இவர்களது குடும்பத்தினருக்கும், செல்வத்தின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதே தெருவில் உள்ள பொதுக் குடிநீர் குழாயில் இன்று காலை அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்வத்தின் மனைவி கற்பகமும் அங்கு தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த கவுன்சிலர் ஜெயலட்சுமியின் மகன் அசோக் (வயது 25) என்பவருக்கும் கற்பகத்திற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டில் முடிந்த கொடூரம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அசோக், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதமான அரிவாளை எடுத்து கற்பகத்தை நோக்கி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகம் தப்பியோட முயன்றபோதும், அசோக் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கற்பகத்தின் உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அலறல் சத்தம் கேட்டு, கற்பகத்தைக் காப்பாற்றுவதற்காக அவரது கணவர் செல்வமும், பள்ளி மாணவனான மகன் கவியரசனும் பதறியடித்தபடி ஓடி வந்தனர். ஆனால், மிகுந்த ஆத்திரத்தில் காணப்பட்ட அசோக், தடுக்க வந்த செல்வத்தையும், சிறுவன் கவியரசனையும் விடாமல் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளினார். இதில் அவர்கள் இருவருக்கும் கை, தலை மற்றும் உடல் பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் விழுந்தன.

தஞ்சை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தாய்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அலறியடித்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு, அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். மக்கள் திரள்வதைக் கண்டதும் அசோக் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வம், கற்பகம் மற்றும் சிறுவன் கவியரசன் ஆகிய மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிரப் பிரிவு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டனர். எனினும், அசோக்கின் முதல் இலக்காக இருந்த கற்பகத்தின் உடலில் மிக ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாலும், அதிகளவில் ரத்தம் வெளியேறியதாலும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் உடனடியாகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் (TMCH) தீவிரப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசரச் சிகிச்சை பிரிவில் தீவிரக் கண்காணிப்பில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பலத்த காயமடைந்த செல்வத்திற்கும், சிறுவனுக்கும் மயிலாடுதுறை மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்

சம்பவம் குறித்துத் தகவலறிந்த மயிலாடுதுறை காவல் நிலைய போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க அறுபத்துமூவர்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கியப் பிரமுகரான அசோக், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தார். அவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் கவுன்சிலரின் மகனே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிய சம்பவம் மயிலாடுதுறை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் மற்றும் வேறு பிரச்சினைகள் சார்ந்த முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget