மேலும் அறிய

மயிலாடுதுறை மக்களே! பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான ரூ.25 லட்சம் கடன்! உடனே விண்ணப்பிங்க! TABCEEDCO திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கும் கடன் உதவியினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்வதற்காகக் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு வணிகம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவித் திட்டங்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEEDCO) கடனுதவித் திட்டங்கள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் பெறத் தேவையான தகுதிகள்

  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டம் விவரங்கள்

சிறு வர்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வோருக்காக இந்தக் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச கடனுதவி: ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: ரூ.1.25 லட்சம் வரை: 7%
  • ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 15.00 லட்சம் வரை: 8%
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக் கடன் திட்டம் (சுய உதவிக் குழுக்களுக்காக) விவரங்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில்/வணிகம் செய்வதற்காகக் குழுக் கடன் வழங்கப்படுகிறது. 

இத்திட்டம் இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

  • ஒருவருக்கு அதிகபட்ச கடன்: ரூ. 1.25 லட்சம் வரை.
  • குழு ஒன்றுக்கு அதிகபட்ச கடன்: ரூ. 25 லட்சம் வரை.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%.
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

குழுக் கடனுக்குரிய கூடுதல் தகுதிகள்

  • சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
  • திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) அந்தக் குழு தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கறவை மாடு வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, கறவை மாடுகள் வாங்குவதற்கு ஒரு சிறப்பு கடனுதவி திட்டமும் உள்ளது.

  • கடன் தொகை: ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60,000/- வீதம், 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ. 1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஆண்டு வட்டி விகிதம்: 7%. 
  • கடனைத் திரும்ப செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழகத்தின் இணையதள முகவரியான www.tabcedco.tn.gov.in-இலிருந்தும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (நகல்கள்)

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

 * சாதிச் சான்றிதழ்

 * வருமானச் சான்றிதழ்

 * பிறப்பிடச் சான்றிதழ்

 * குடும்ப அட்டை

 * ஓட்டுநர் உரிமம்

 * ஆதார் அட்டை

 * வங்கி கோரும் பிற ஆவணங்கள்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்

  • சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
  • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்
  • கூட்டுறவு வங்கிகள்

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இந்தச் சிறப்பான கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
மாதம் ரூ.50,000 மதிப்பூதியம்! மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வேலை... தகுதி என்ன தெரியுமா?
மாதம் ரூ.50,000 மதிப்பூதியம்! மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வேலை... தகுதி என்ன தெரியுமா?
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kader Moideen IUML : விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
US Iran War: “விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
“விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
TN Ministers Portfolio : புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
Scooter vs Bike Mileage: ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
Top 5 Safest Cars: ‘ஸ்டைலு, அதே நேரத்துல ஸ்ட்ராங்கு'; இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
‘ஸ்டைலு, அதே நேரத்துல ஸ்ட்ராங்கு'; இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
School Reopen: கொளுத்தும் வெயில்.! பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா.? மாணவர்களுக்கு குட் நியூஸ் வருமா.??
கொளுத்தும் வெயில்.! பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா.? மாணவர்களுக்கு குட் நியூஸ் வருமா.??
Embed widget