மேலும் அறிய

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!

சீர்காழியில் வெறிநாய் ஒன்று ஒரே நேரத்தில் 4 பேரை கடித்ததில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து நான்கு பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கி பணியாளருக்கு நேர்ந்த விபரீதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகள் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான மண்டலங்களாக திகழ்பவை. இந்நிலையில், இன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென பொதுமக்களை நோக்கி பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (35) என்பவர் சீர்காழியில் உள்ள வங்கி ஒன்றில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பணி நிமித்தமாக தென்பாதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த வெறிநாய் எதிர்பாராத விதமாக அவரைப் பாய்ந்து கடித்தது. இதனால் நிலைகுலைந்த அவர் அலறித் துடித்தார்.

அடுத்தடுத்து பாய்ந்த வெறிநாய்

சங்கரை கடித்த கையோடு ஆத்திரத்துடன் நகர்ந்த அந்த வெறிநாய், அடுத்து புதிய பேருந்து நிலையப் பகுதியை நோக்கி ஓடியது. அங்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நவநீதன் (53) என்பவரை கடித்தது. மேலும் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஜக்ரியா (73) என்பவரையும், பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஸ்ரீராம் என்பவரையும் அடுத்தடுத்து கடித்துக் குதறியது. ஒரே நேரத்தில் நான்கு பேரை அந்த நாய் கடித்ததைக் கண்ட பேருந்து நிலையப் பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் கடும் அச்சமடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடினர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாய்க்கடியால் படுகாயமடைந்து துடித்த சங்கர், நவநீதன், ஜக்ரியா மற்றும் மாணவர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சீர்காழி அரசு பெரிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு, மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை வழங்கி, வெறிநாய் கடிக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நால்வரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் வீதிக்கு வர அச்சம்

சீர்காழி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையம், சந்தை பகுதிகள், தென்பாதி போன்ற முக்கிய இடங்களில் கூட்டமாகச் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகளும், நடைபாதைவாசிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது ஒரே நாளில், ஒரே நேரத்தில் நகரின் மையப்பகுதியில் வைத்து வெறிநாய் நான்கு பேரைக்கடித்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது. சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தனியாக வீதியை விட்டு வெளியே வர அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தெருநாய்களை பிடிக்க கோரிக்கை

நகரில் வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். நகரின் அனைத்து வார்டுகளிலும், குறிப்பாக பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆபத்தான தெருநாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

மேலும், தெருநாய்களுக்கு முறையாக வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு திட்டத்தைச் சீராகச் செயல்படுத்துவதற்கும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Embed widget