மேலும் அறிய

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் 100% அரசு மானியம் பெற்று பயனடைய தோட்டக்கலைத் துறை அழைப்பி விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பாசன நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தவும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பிரதம மந்திரி - தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் "துளி நீரில் அதிக பயிர்" என்ற பிரிவின் கீழ், 80 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவ அரசு மானியம் வழங்கப்படவுள்ளது. விவசாயப் பெருமக்கள் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இத்திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய பாசன முறையும் நுண்ணீர் பாசனத்தின் அவசியமும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்னை, மா, முந்திரி, வாழை மற்றும் பல்வேறு காய்கறிப் பயிர்கள் உட்பட சுமார் 4000 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை பெரும்பான்மையான விவசாயிகள் பழமையான திறந்தவெளி வாய்க்கால் பாசன முறையையே பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையில் அதிகளவு நீர் வீணாவதுடன், சாகுபடி செலவும் அதிகரிக்கிறது. வறட்சி காலங்களில் பயிர்களைக் காப்பாற்றவும், நிலத்தடி நீர்மட்டத்தைச் சீராகப் பராமரிக்கவும் நுண்ணீர் பாசன முறையே மிகச் சிறந்த மாற்று தீர்வாக வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

தெளிப்புநீர் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் அறிவியல் நன்மைகள்

நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனம் மற்றும் சொட்டுநீர் பாசனம் என இருவகை நுட்பங்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கின்றன. இதில் தெளிப்புநீர் பாசன முறையானது கீரை மற்றும் கொத்தமல்லி போன்ற பரவலாக வளரும் தோட்டக்கலை பயிர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். சொட்டுநீர் பாசன அமைப்பில், பிரத்யேகக் குழாய்கள் மூலம் பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகச் சொட்டு சொட்டாகத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய முடிகிறது. மேலும், நீரில் கரையும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இக்குழாய்கள் மூலமே நேரடியாக வேர்ப்பகுதிக்கு அளிக்க முடிவதால், ஆட்களுக்கான கூலிச் செலவு கணிசமாகக் குறைகிறது. 

அறிவியல் பூர்வமாகக் கணக்கிடப்பட்டு தேவையான அளவு மட்டுமே நீர் வழங்கப்படுவதால் பாசன நீர் சேமிக்கப்படுவதோடு, வேரைச் சுற்றி மட்டும் நீர் பாய்வதால் களைச்செடிகளின் வளர்ச்சியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

மானிய விவரங்கள் மற்றும் பயன்பெறும் கால அளவு

ஒவ்வொரு துளி நீரையும் திறம்படப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்குவதையே இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத முழு அரசு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அரசு மானியத்திலும் பாசன அமைப்புகள் அமைத்துத் தரப்படுகின்றன. ஒருமுறை மானியம் பெற்று சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள், 7 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அதே நிலத்திற்கு மானியத்தில் புதிய பாசன அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். 

அதேபோல், ஏற்கனவே தெளிப்புநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்ற மானியத்தைக் கழித்துக் கொண்டு சொட்டுநீர் பாசன வசதிக்கு மாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2026-2027 நிதியாண்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 80 ஹெக்டேர் பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் மற்றும் தொடர்பு எண்கள்

இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தங்களது குடும்ப அட்டை நகல், புகைப்பட அடையாள ஆவணம், விவசாயியின் புகைப்படம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், நில வரைபடம் மற்றும் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டார விவசாயிகள், மயிலாடுதுறை தோட்டக்கலை அலுவலரை 9698502526 என்ற எண்ணிலும், குத்தாலம் அலுவலரை 9843405617 என்ற எண்ணிலும், தோட்டக்கலை உதவி இயக்குநரை 9095854787 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார விவசாயிகள், செம்பனார்கோவில் அலுவலரை 9940247961, சீர்காழி அலுவலரை 8072439304, கொள்ளிடம் அலுவலரை 8220887022 ஆகிய எண்களிலும், தோட்டக்கலை உதவி இயக்குநரை 9159627783 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சோதியக்குடி ஊராட்சியை சூறையாடிய சூறைக்காற்று தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பெரும் சேதம்!
சோதியக்குடி ஊராட்சியை சூறையாடிய சூறைக்காற்று தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பெரும் சேதம்!
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
105 நிலையங்கள் திறப்பு அதிகாரப்பூர்வ பொய்..? கொந்தளிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்...
105 நிலையங்கள் திறப்பு அதிகாரப்பூர்வ பொய்..? கொந்தளிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்...
மூட்டைக்கு ₹40 கொடுத்தால்தான் கதவு திறக்குமா? மழை நீரில் மிதக்கும் நெல்மணிகள்... கண்ணீரில் விவசாயிகள்...
மூட்டைக்கு ₹40 கொடுத்தால்தான் கதவு திறக்குமா? மழை நீரில் மிதக்கும் நெல்மணிகள்... கண்ணீரில் விவசாயிகள்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget