மேலும் அறிய

கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே சின்ன நிம்மேலி கிராமத்தில் மயான கொட்டகை  இல்லாததால் மழையில்  இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வரும் மக்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து உடலை தகனம் செய்யும் அவலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

மயான கொட்டகை இன்றி அவதியடையும் மக்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன நிம்மேலி கிராமம் அமைந்துள்ளது. ஏழை எளிய விவசாயி கூலி தொழிலாளிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தகனம்  செய்து வருகின்றனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

மழையால் மேலும் இன்னல்

அதுவும் மழை காலங்களில் மழை காரணமாக இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுகுறித்து கூறி தங்களுக்கு மயான கொட்டகை அமைத்துதர வேண்டும் என சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அது குறித்து செவி சாய்சாய்க்காத அதிகாரிகள் இதுநாள் வரை அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

தற்காலிக கீற்று கொட்டகை

இந்த சூழலில் சின்ன நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சந்திரகாசு என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயான கொட்டகை இல்லாததால், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வசூல் செய்து அவர்களது சொந்த செலவில் தற்காலி கீற்றுக் கொட்டகை அமைத்து, அதில் உயிரிழந்த சந்திரகாசு உடலை தகனம் செய்துள்ளனர். மேலும் இறந்தவரின் இறுதி சடங்கையும் அதிலே செய்துள்ளனர்.


கொட்டி தீர்க்கும் கனமழை - இறந்தவரின் உடலை தகனம் செய்ய தவிக்கும் உறவினர்கள் ; கண்டுக் கொள்ளாத அரசு...!

அரசிற்கு இது ஒரு பொருட்டல்ல

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து சின்ன நிம்மேலி கிராமத்திற்கு உடனடியாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்களை அனுபவித்துவிட்டு கடைசியில் அவனின் பூதவுடல் ஆனது உறவினர்கள் நண்பர்கள் மரியாதை செலுத்த அமைதியான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் இறந்த பிறகும் அவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய இன்னல்கள் ஏற்பட்டால், இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் எந்த அளவிற்கு மன வேதனை அடைவார்கள் என்பதை அதனை அருகில் இருந்து காண்பவர்களாக உணர முடியும். ஆகையால் இது போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தாமல், பல்லாயிரம் கோடி திட்டங்களை காட்டிலும், இது போன்ற சிறு மயான கொட்டைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது அரசிற்கு ஒரு பெரும் நிதி சுமை கிடையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

34,000+ வங்கி பணியிடங்கள் 2026: எஸ்பிஐ, ஐபிபிஎஸ் தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி விவரங்கள்!
34,000+ வங்கி பணியிடங்கள் 2026: எஸ்பிஐ, ஐபிபிஎஸ் தேர்வுகள் மற்றும் இலவச பயிற்சி விவரங்கள்!
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
காகிதத்தில் 110... களத்தில் 30!  கிணறு வெட்டிய ரசீது கதையாக மாறிய விவசாயிகளின் நிலை...
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Tata Harrier EV: ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Embed widget