மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (23.01.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 23.01.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மயிலாடுதுறை மின் கோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டம் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 23.01.2025 வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி செயற் பொறியாளர்கள் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் அருள்செல்வன், மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள், மயிலாடுதுறை புறநகர் உதவி செயற் பொறியாளர் பாலமுருகன்  ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

எதிர்வரும் 23.01-2025 வியாழக்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையங்களில் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணையின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனவும் அதேபோன்று குத்தாலம் துணை மின்நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 வரை மேற்படி துணையின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் ஆகிய தெரிவித்துள்ளார்.

மின்நிறுத்த பகுதிகள் 

மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருஇந்தளூர், பூம்புகார் சாலை, ஆனந்த தாண்டவம் சாலை, சீர்காழி சாலை, கால் டாக்சி, ராஜா தெரு, வடக்கு ராமலிங்கம் தெரு, புது அக்கரகாரம், மதுர நகர், மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்  கிளியனூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும்  பெருஞ்சேரி, எலந்தங்குடி, அரிவேலூர், அகரகீரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

 

குத்தாலம் பகுதிகளில் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் 

மூவலூர், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், கோமல், கந்தமங்கலம், குத்தாலம், முருகமங்கலம், மாங்குடி, வானாதிராஜபுரம், பேராவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி மின் கோட்ட மின் நிறுத்தம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு மற்றும் ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 23.01.2025 வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி செயற் பொறியாளர்கள் சீர்காழி வடக்கு உதவி செயற் பொறியாளர் ராஜா, சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி  ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாளை தினம் மின் பராமரிப்பு பணிக்காக கீழ்க்கண்ட ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது‌. வைத்தீஸ்வரன்கோயில் (நகர்)  எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், காரைமேடு, தென்னலக்குடி, மேலச்சாலை, திருவெண்காடு நகர் தெற்கு, சாலக்கரை, நாயக்கர்குப்பம், பெருந்தோட்டம், சாவடிகுப்பம், கொள்ளிடம், மாங்களாம்பட்டு, தைக்கால், குமிளங்காடு கோபாலசமுத்திரம், சரஸ்வதிவிளாகம், தாண்டவன்குளம்,  பழையபாளையம், கொடகாரமூலை, கொட்டாய்மேடு அதன் சுற்று வட்டார பகுதிகள் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
Embed widget