மேலும் அறிய

Power Shutdown: அலாட் ஆகிடுங்க மக்களே... நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது...!

Mayiladuthurai Power Shutdown 18.01.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (18.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மயிலாடுதுறை மின் கோட்ட மின்வாரிய செய்தி குறிப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை 18.01.2025 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 18.01.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை 110/33/11 KVSS துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவே வழுவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் 11கிவோ வழுவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான,

மின்நிறுத்த பகுதிகள்

எலந்தங்னுடி, திருநாள் கொண்டச்சேரி, வழுவூர், பண்டாரவடை, வாளவராயன்குப்பம், கப்பூர், பூவாலை, பெரியேரி, கோடங்குடி, முட்டம், ஊர்குடி, நெடுமருதூர், பட்டமங்கலம், RK புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை நகர் பகுதி

இதேபோன்று மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான, சீனிவாசபுரம், சுப்பிரமணியபுரம், சத்திய சாய் நகர், பட்டமங்கள ஆராய தெரு, திருவாரூர் ரோடு, காமராஜர் சாலை, ரேவதி நகர், மீன் மார்க்கெட், திருமஞ்சன வீதி, பாசிகடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

சீர்காழி மின்வாரிய கோட்ட மின்நிறுத்தம் 

சீர்காழி மின்வாரிய கோட்டம் செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட 110/11 KV கிடாரங்கொண்டான் துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11 KV மணிகிராமம் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 11 KV மணிகிராமம் மின்பாதையிலிருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளான ஆலங்காடு, ராதாநல்லூர், இளையமதுகுடம், மற்றும் 110/11 KV கிடாரங்கொண்டான், துணைமின்நிலையத்திலிருந்து செல்லும் 11 KV செம்பனார்கோயில் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 1KV செம்பனார்கோயில் மின்பாதையிலிருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளான கிடாரங்கொண்டான், பொன்செய், கீழையூர், செம்பனார்கோயில் பரசலூர் மெயின் ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் 18.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!
TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!
செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..
செங்கோட்டையனையும் என்னையும் பிரிக்க முடியாது; முயற்சி செய்தால் மூக்குடைப்பார்கள்- இபிஎஸ் கலகல..
Embed widget