Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்....!
Mayiladuthurai Power Shutdown 10.12.24: மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மின் பாதை கடலங்குட், வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, மற்றும் ஆலங்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Ravi shastri : ”கம்மின்சை பார்த்து கத்துக்கோங்க ரோகித்..” இப்படி ஆடவே கூடாது.. ரவி சாஸ்திரி அட்வைஸ்

பொதுமக்களுக்கு அறிவுத்தல்
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















