மறைந்த தாயின் நினைவாக வைத்திருத்த தேர்வு அட்டை; உடைத்து போட்டு மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்
மறைந்த தாயின் நினைவாக வைத்திருத்த தேர்வு அட்டையை உடைத்து போட்டு, மாணவனை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பதற்கு முன் அம்மா வாங்கி கொடுத்த தேர்வு அட்டையில் ஆர்ட்டின் படம் போட்டு வைத்திருந்த அட்டையை ஆசிரியர்கள் பிடுங்கி உடைத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவனை ஆசிரியர்கள் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
என்ன நடந்தது..?
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகுமார் என்பவரின் 15 வயது மகன் உதயசாரதி. இவர் மூவலூர் ராமாமிர்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தாயார் தரணி 2015 ஆம் ஆண்டு இறந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு தனது மகன் தேர்வு எழுதுவதற்கான தேர்வு அட்டையை வாங்கி கொடுத்துள்ளார். அம்மாவின் நினைவாக அந்த அட்டையை உதயசாரதி பாதுகாப்பாக வைத்து அந்த அட்டையை பயன்படுத்தி தேர்வு எழுதி வருகிறார். மேலும் அந்த அட்டையில் ஆர்ட்டின் வரைந்து தனக்கு பிடித்த டூவீலரின் பெயரை எழுதி வைத்துள்ளார் உதய சாரதி. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தேர்வு எழுதிய மாணவர் தனது நண்பர் குணசீலன் என்பவர் மதியம் தேர்வு எழுதுவதற்காக தேர்வு அட்டையை கொடுத்துள்ளார். தேர்வு அட்டையில் ஆர்ட்டின் படம் போடப்பட்டிருந்ததால் ஆசிரியை கலைவாணி அந்த பரிட்சை அட்டையை வாங்கி தனது கணவரான தமிழ் ஆசிரியர் வரதராஜனிடம் கொடுத்துள்ளார்.
IPL 2024: ஐபிஎல் 17வது சீசனையும் மிஸ் செய்யப் போகிறாரா விராட் கோலி..? அப்போ! டி20 உலகக் கோப்பை..!
தொடர்ந்து அந்த அட்டையை வரதராஜன் உடைத்ததாகவும், கலைவாணி உள்ளிட்ட ஆசிரியர்களிடம் அட்டையை உடைத்தது குறித்து மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் கலைவாணியின் கணவர் வரதராஜன், தலைமை ஆசிரியர் மஞ்சுளா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அருண்பாபு ஆகியோர் மாணவன் உதய சாரதியை கையாளும், ஸ்டிக்காலும் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குத்தாலம் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டது.
Khushbu Sundar: ”ரொம்ப பெருமையா இருக்கு”; சென்னைக்கு குஷ்பு கொடுத்த சர்டிஃபிகேட்; எதுக்குனு தெரியுமா
அதனை அடுத்து புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனை அடித்தது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், அட்டையை யார் உடைத்தது என்று ஆத்திரத்தில் வந்த மாணவன் சொல்லமுடியாத வார்தைகளை கூறியதாகவும், இந்த பிரச்சனை குறித்து இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.