ஒரு கடை கூட சாலையில் இருக்க கூடாது - அதிரடி காட்டிய காவல் ஆய்வாளர் - சீர்காழியில் பரபரப்பு
சீர்காழியில் நீண்ட கால மாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழியில் நீண்ட கால மாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மேலும் இதுபோன்று செய்யக்கூடாது என காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்த நிகழ்வு பொதுமக்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்நிலைய காவல் ஆய்வாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலோர காவல் குழும ஆய்வாளராக இருந்த புயல் பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். துடிப்பாக பணிபுரியும் இவருக்கு மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மத்தியில் நற்பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து மிகுந்த சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையின் இருபுறமும் அமைந்துள்ள கடைகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வந்தார்.
தொடர்ந்த விபத்துகள்
இதனால் அப்பகுதியில் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் அதிரடியாக அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கூறி அகற்றி அப்புற படுத்தியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் நீண்ட நாட்கள் வைத்து வந்த கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் காவல் ஆய்வாளர் தானாக முன்வந்து விபத்துகளை தடுக்கும் வகையில் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
ஆக்கிரமித்து
சீர்காழி பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடையின் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமித்து கடையை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் சீர்காழி நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது மட்டும் இன்றி விபத்துக்களும் அதிகரித்து வந்தன.
புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
இதுகுறித்து பல முறை புகார் செய்தும் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய வந்தார்கள் என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவித்து வந்தனர்.
எச்சரித்த காவல் ஆய்வாளர்
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏராளமான காவல்துறையினரின் பாதுகாப்போடு பழைய பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக செயல் பட்டு வந்த கடைகளை அகற்றி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை நடத்துமாறு கடை உரிமையாளர்களை எச்சரித்தார்.
இதேபோல் பிடாரிவடக்கு வீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்றி கடை உரிமையாளரிடம் போக்குவ ரத்திற்கு இடையூறாக சாலை களில் விளம்பர பெயர் பல கைகளை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். குறிப்பாக சீர்காழி பழைய புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நீண்ட கால மாக போக்குவரத்திற்கு - இடையூறாக செயல்பட்ட கடைகளை புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் அகற்றியது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரப்வேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.