மேலும் அறிய

தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?

"உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்"

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி எந்த ஒரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

காவல்துறை விளக்கம்

இது குறித்து அறிவித்துள்ள காவல்துறை, கடந்த 23-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்ததாகவும், இதன் அடிப்படையில் அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) காமினி மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தல்

தொடர்ந்து விசாரணையின்போது புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது: மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது: மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
ரூ.60.97 கோடியில் புதிய பைபாஸ் சாலை! 2.26 கி.மீ. தொலைவுக்கு திட்டம் – வேலூர் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்!
60 கோடியில் புதிய பைபாஸ் சாலை! 2.26 கி.மீ தொலைவுக்கு திட்டம்! வேலூர் மக்களுக்கு குட் நியூஸ்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Embed widget